சந்தானத்தின் 20-ஆவது படத்துக்கு ‘அதிசய பிறவி’ எனத் தலைப்பு அறிவிப்பு!
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள அவரது 20-ஆவது திரைப்படத்துக்கு ‘அதிசய பிறவி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் சந்தானம் நடித்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்கட்கிழமை (அக். 19) நிறைவடைந்தது. இதுவரை தலைப்பு அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று (அக். 20) படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளன.
வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதனைப் பகிர்ந்துள்ளது. “அசாதாரணமான ஒரு பயணத்துக்குத் தயாராகுங்கள். இங்கே ஒவ்வொரு நொடியிலும் அனைத்தும் மாறும்” என்ற வாசகத்துடன் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளது.
வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கே7 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக கோபிகா ரமேஷ் நடிக்கிறார்.
ரிச்சட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பும் முதல் தோற்றமும் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.