15 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் கிடைத்த வெற்றி: ரசிகர்களுக்கு நடிகர் ரிஷிகாந்த் நெகிழ்ச்சி நன்றி

arvloshan.com

திரைத்துறையில் 15 ஆண்டுகள் தொடர் போராட்டங்கள் மற்றும் ஏமாற்றங்களைக் கடந்த பின்னர், தற்போது மக்களுக்கு மத்தியில் கிடைத்துள்ள அன்பும் அங்கீகாரமும் தம்மை நெகிழ வைத்துள்ளதாக பிரபல நடிகர் ரிஷிகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக இயங்கிவரும் ‘மொத ராத்திரி’ (Modha Raathiri) மற்றும் ‘டோரதி’ (Dorothy) ஆகிய இரு திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள அபார வரவேற்பைத் தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள உணர்வுப்பூர்வமான அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"எனது 15 வருட காலத் திரைப்பயணம் அர்த்தமுள்ளதாக மாறியுள்ளது என்பதை உணர வைத்த ஒவ்வொரு நல்ல உள்ளத்திற்கும், இத்தனை காலமும் எனக்கு உறுதுணையாக நின்ற ஒவ்வொருவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் பல வருடக் காத்திருப்புகள், எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிட்டது. வாழ்க்கை கற்பித்த பாடங்களுக்கு மத்தியில், ‘இந்தப் பயணம் என்னை எங்கு கொண்டு செல்லப்போகிறது?’ என்று எனக்குள்ளேயே பலமுறை வினா எழுப்பிய தருணங்கள் உண்டு. ஆனால் இன்று, பொதுமக்கள் என் மீது பொழியும் அன்பையும் ஆதரவையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

தொடர்ச்சியாக இரு திரைப்படங்களின் வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் காரணமாக, வாழ்த்துக்களைத் தெரிவித்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க முடியாமல் போனது. இருப்பினும், பொதுமக்கள் என் மீது வைத்துள்ள அன்பையும் மரியாதையையும் நான் ஒவ்வொரு தருணத்திலும் உணர்ந்தே இருக்கிறேன்.

இந்த அன்பும் அங்கீகாரமும் எனக்கு தலைக்கனத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் நான் மிகுந்த கவனத்துடன் இருக்கிறேன். மாறாக, இது எனக்கு அதிக பொறுப்புணர்வை வழங்கியுள்ளது. இனிவரும் காலங்களில் வெளியாகும் எனது ஒவ்வொரு திரைப்படத்திலும் இன்னும் தீவிரமாக உழைத்து, ரசிகர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற முழு முயற்சியையும் மேற்கொள்வேன்.

15 வருடங்களாக அங்கீகாரத்திற்காகப் போராடிய எனக்கு, பொதுமக்கள் அளித்துள்ள இந்த வரவேற்பு மிகவும் மறக்க முடியாத ஒன்றாகும். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டமைக்காக நன்றி தெரிவிப்பதோடு, எனது உண்மையான திரைப்பயணம் மற்றும் பொறுப்பு இங்கிருந்தே தொடங்குகிறது என்பதை உணர்கிறேன்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘ஓம்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

...

arvoshan.com

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்திற்கு சூர்யா, கார்த்தி வாழ்த்து!

...

arvoshan.com

துருவ் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான 'சைமா' விருது!

...

arvoshan.com

‘டோரதி’ திரைப்பட கதைத் திருட்டு: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது புகார்!

...

arvoshan.com

‘பத்தா’ திரைப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சிப் பாராட்டு!

...

arvoshan.com

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’ எனும் பெயரில் திரைப்படமாகிறது!

...

arvoshan.com

கணினித் தொழில்நுட்பத்தில் 'யாழி': 'அன்னக்கிளியே' சுயாதீன பாடல் வெளியீடு!

...

arvoshan.com

மணிகண்டனின் 'மக்கள் காவலன்' டிசம்பர் 4இல் வெளியீடு!

...

arvoshan.com

மைசூரில் 'தர்மன்' படப்பிடிப்பு: ஆட்டோவில் வந்து ரசிகர்களை நெகிழ வைத்த ரஜினிகாந்த்!

...

arvoshan.com

‘டோரதி’ திரைப்படம்: கார்த்திக் சுப்புராஜுக்கு திருநர்கள் சமூகம் வரவேற்பு

...

arvoshan.com

‘ஃபஹத் பாசிலுக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன’: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

...

arvoshan.com

நடிகை ரகுல் பிரீத் சிங் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

...

arvoshan.com

‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

...

arvoshan.com

கைவிடப்பட்ட திரைப்படம் தொடர்பான சர்ச்சை: வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் விளக்கம்!

...

arvoshan.com

‘டி56’ திரைப்படப் பூஜை மானாமதுரையில் கோலாகலம்: தனுஷ், வடிவேலு நெகிழ்ச்சி உரை

...