குற்றப் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படத்தில் பிரேம்ஜி அமரன்!

arvloshan.com

நடிகர் பிரேம்ஜி அமரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய குற்றத் த்ரில்லர் திரைப்படத்தை இயக்குநர் சி. கணேஷ்குமார் இயக்கி வருகிறார்.

‘வல்லமை’, ‘நரி வேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ள சி. கணேஷ்குமார், இப்படத்தின் மூலம் இயக்குநராகப் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். அபிராமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாவண்யா அபிராமி இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தில் போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிற்பி குமார் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் சி. கணேஷ்குமார் தெரிவிக்கையில், இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்படுவதும், அந்தக் கொலையைச் செய்தது யார் என்பதைச் சுற்றியுமே திரைப்படத்தின் கதை நகர்வதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரேம்ஜி அமரன், இசையமைப்புப் பணிகளையும் மேற்கொள்கிறார். தொடக்கம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் விறுவிறுப்பான காட்சிகளுடன் திரைப்படம் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஷாருக்கானின் ‘King’ திரைப்படம் – வெளிநாட்டு விநியோக உரிமை ரூ.175 கோடிக்கு விற்பனை!

...

arvoshan.com

பழங்குடி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அரிகொம்பன்’ திரைப்படம்

...

arvoshan.com

15 நாட்களில் ரூ.765 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ புதிய சாதனை!!

...

arvoshan.com

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராகக் களமிறங்கும் மித்துன் மாணிக்கம் – ‘ஃபேமிலி பாய்’ டிசம்பர் 11இல் வெளியீடு

...

arvoshan.com

உண்மை தெரியாமல் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது! – சுந்தர்.சி

...

arvoshan.com

‘ஸ்டார் ட்ரெக்’ புகழ் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

...

arvoshan.com

ஏ.ஐ. மூலம் போலி வீடியோ: நடிகை சுனைனா கடும் கண்டனம்

...

arvoshan.com

‘தத் த்வம் அஸி’ படத்தின் தலைப்பு ‘மணிகண்டா’ என மாற்றம்!

...

arvoshan.com

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ‘தர்மன்’ – ரஜினிகாந்துடன் மீண்டும் இணையும் நயன்தாரா!

...

arvoshan.com

கோவையில் நடிகை த்ரிஷாவின் ரோடு ஷோ – ரசிகர்கள் கூட்டம் அலைமோதல்!

...

arvoshan.com

‘ஓம்: சாப்டர் 1’ – சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!

...

arvoshan.com

தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனை – ரூ.710 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’

...

arvoshan.com

40 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினிகாந்த்!

...

arvoshan.com

குடும்பத் திரில்லர் கதையில் சசிகுமார் – சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பம்!

...

arvoshan.com

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

...