தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனை – ரூ.710 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய ரீதியில் இந்திய ரூ.710 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று, இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திரைப்படங்களின் வசூல் விபரங்களைக் கண்காணிக்கும் Sacnilk தளத்தின் தகவலின்படி, கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி வரையில் இப்படம் உலகளாவிய ரீதியில் இந்திய ரூ.710.35 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம், 2018ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் ஈட்டிய சுமார் ரூ.691 கோடி வசூலை ‘ஜெயிலர் 2’ முறியடித்துள்ளது.
இதன் மூலம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.700 கோடி என்ற மைல்கல்லைக் கடந்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் ‘ஜெயிலர் 2’ பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியான இத்திரைப்படம், இந்தியாவில் மட்டும் ரூ.466.85 கோடியை வசூலித்துள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் இருந்து ரூ.243.50 கோடி வசூலாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம், பல்வேறு சந்தைகளிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாகவும் உருவெடுத்துள்ள ‘ஜெயிலர் 2’, இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், அதன் மொத்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.