குடும்பத் திரில்லர் கதையில் சசிகுமார் – சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பம்!
நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகியுள்ளது.
கன்னடத் திரைப்பட இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கும் இப்படம், புதுமையான குடும்பத் திரில்லர் கதைக்களத்தைக் கொண்டதாக உருவாகிறது.
இப்படத்தில் சுவாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர், நரேன், ஹரிசங்கர், ஹரிஷ் பெரேடி, தேனப்பன், வையாபுரி, ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார்.
டிரைடென்ட் ஆர்ட்ஸ், 6 டைமன்ஷன்ஸ் பிலிம்ஸ் மற்றும் மீடியா எல்.எல்.பி. ஆகிய நிறுவனங்களின் சார்பில் ஆர். ரவீந்திரன், சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோருடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் ஹரி சந்தோஷ் தெரிவிக்கையில், இது புதுமையான குடும்பத் திரில்லர் வகையைச் சேர்ந்த கதை என்றும், பார்வையாளர்களுக்கு நிச்சயமாகப் புதிய அனுபவத்தை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சசிகுமார் நடிப்பில் உருவாகும் இப்படம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.