பழங்குடி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அரிகொம்பன்’ திரைப்படம்
பழங்குடி மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் மிதுன் மகேஸ்வரன், மேஜிக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள இத்திரைப்படம், கேரளா மற்றும் தமிழக வனப்பகுதிகளில் பிரபலமான அரிகொம்பன் என்ற காட்டு யானையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், பழங்குடி மக்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களைப் பேசுகிறது.
இத்திரைப்படத்தில் தேவிகா கிருஷ்ணன், சுப்பிரமணியன் சிவா, அஜய், அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிசம்பர் 11ஆம் திகதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டீசரை நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ளார்.