‘ஓம்: சாப்டர் 1’ – சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!

arvloshan.com

தனுஷ் மற்றும் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: சாப்டர் 1’ திரைப்படத்தில் சாய் பல்லவி ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் இந்த 1 நிமிடம் 42 விநாடிகள் கொண்ட அறிமுக வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

அதில், “கம்பீரம் அவளது அடையாளம். நீதிக்காக நிற்கும் சக்தி. நித்யா ரெட்டியாக சாய் பல்லவியை அறிமுகப்படுத்துகிறோம்” எனப் படக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிமுக வீடியோவில், நித்யா ரெட்டி என்ற கதாபாத்திரத்தின் பின்னணி மற்றும் அவரது பணிப் பொறுப்புகள் குறித்து உயரதிகாரி ஒருவர் விளக்குகிறார்.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நித்யா ரெட்டி, அம்மாநில காவல்துறையில் உதவிக் காவல் கண்காணிப்பாளராக (ASP) பணியாற்றியவர். பின்னர், இன்டர்போலுடன் இணைந்து பணியாற்றுவதற்காக மத்திய புலனாய்வுப் பிரிவில் (CBI) கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றதாக வீடியோவில் தெரிவிக்கப்படுகிறது.

இளம் வயதிலேயே நேர்மை, புத்திசாலித்தனம் மற்றும் அனுபவம் ஆகியவற்றைக் கொண்ட அதிகாரியாக அவர் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

மேலும், நாயுடுபேட்டையைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த வனத்துறை அதிகாரியின் மகளான நித்யா ரெட்டி, தற்போது செம்மரக் கடத்தல் தொடர்பான விசாரணையை முன்னெடுக்கும் ‘ஆபரேஷன் ஓம்’ திட்டத்தின் விசாரணை அதிகாரியாகப் பணியாற்றுவதாகவும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், தனுஷின் 55-ஆவது திரைப்படமாகும். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். எழிலரசு ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ஓம்: சாப்டர் 1’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ‘தர்மன்’ – ரஜினிகாந்துடன் மீண்டும் இணையும் நயன்தாரா!

...

arvoshan.com

கோவையில் நடிகை த்ரிஷாவின் ரோடு ஷோ – ரசிகர்கள் கூட்டம் அலைமோதல்!

...

arvoshan.com

தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனை – ரூ.710 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’

...

arvoshan.com

40 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினிகாந்த்!

...

arvoshan.com

குடும்பத் திரில்லர் கதையில் சசிகுமார் – சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பம்!

...

arvoshan.com

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

...

arvoshan.com

அமிதாப், அமீர் கான், கங்கணா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுக்குக் குறிவைக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்?

...

arvoshan.com

டெல்லியில் முகாமிட்டிருக்கும் நடிகர் தனுஷ்: அரசியல் வருகை குறித்து ஆலோசனையா?

...

arvoshan.com

சந்தானத்தின் 20-ஆவது படத்துக்கு ‘அதிசய பிறவி’ எனத் தலைப்பு அறிவிப்பு!

...

arvoshan.com

‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ படப்பிடிப்பு நிறைவு!

...

arvoshan.com

“திரைப்படங்கள் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றம் உருவாக வேண்டும்” – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

...

arvoshan.com

இசையமைப்பாளர் தேவாவின் இறுதிச் சடங்கு – தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை

...

arvoshan.com

“சொக்கத் தங்கம் தேவா!” – ரஜினிகாந்த் உருக்கமான இரங்கல்

...

arvoshan.com

கேரளாவில் விஜய்யின் ‘லியோ’ வசூல் சாதனையை முறியடித்த ரஜினியின் ‘ஜெயிலர் 2’!

...

arvoshan.com

உலகையே அதிரவைத்த ரஜினி ரசிகர்கள்! ‘ஜெயிலர் 2’ வெளியீட்டால் திருவிழாக் கோலத்தில் திரையரங்குகள்!

...