இலங்கையில் FBI அதிகாரிகள்: 80க்கும் மேற்பட்ட சாதனங்கள் ஆய்வு

arvloshan.com

அமெரிக்கப் பிரஜைகளைக் குறிவைத்து இணையவழியில் மோசடிகளில் ஈடுபடும் சர்வதேச குற்றக் கும்பல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான FBI மற்றும் நீதித்திணைக்களத்தின் (DOJ) அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

நவம்பர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம், இணையவழி மோசடிகள் மற்றும் நாடுகளைக் கடந்து செயல்படும் குற்ற வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க மற்றும் இலங்கை சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகும் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, FBI மற்றும் நீதித்திணைக்கள அதிகாரிகள் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸின் விசேட விசாரணைப் பிரிவுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இதில், பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவு (CCIU), மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மற்றும் தொழில்நுட்ப உதவிப் பிரிவு (TAU) ஆகியவற்றின் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மோசடி மையங்கள் தொடர்பான விசாரணைகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், டிஜிட்டல் ஆதாரங்களைத் திரட்டுவதற்காக 80க்கும் மேற்பட்ட இலத்திரனியல் சாதனங்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மேலும், விசாரணைகளை முன்னெடுக்கும் உத்திகள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், டிஜிட்டல் ஆதாரங்களைக் கையாளுதல் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட சாதனங்களில் இருந்து ஆதாரங்களைப் பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளிலும் அமெரிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இணையவழிக் குற்றச் செயல்கள் ஊடாக, குறிப்பாக அமெரிக்கப் பிரஜைகளை இலக்குவைத்து நிதி மோசடிகளில் ஈடுபடும் சர்வதேசக் குற்ற வலையமைப்புகளை முறியடிப்பதே இந்த விசாரணைகளின் பிரதான நோக்கமாகும் என அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சர்வதேசக் குற்ற வலையமைப்புகள் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பல பில்லியன் டொலர்களை மோசடி செய்வதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகளுக்கு இடையிலான சட்ட அமலாக்க ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக, FBI மற்றும் இலங்கை அதிகாரிகள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுடன், விசாரணைகளுக்கான புதிய தடயங்களைப் பின்தொடர்ந்து, சர்வதேச நிதி மோசடிகளில் தொடர்புடையவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதுடன், இணையவழி மோசடிகளில் ஈடுபடுவோரைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே இந்த ஒத்துழைப்பின் பரந்த நோக்கம் என அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

பொரளை டி.எஸ். சேனநாயக்க சந்தியில் இன்று இரவு முதல் வீதி மூடல்

...

arvoshan.com

15 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் வரி அதிகாரிக்கு சிறைத்தண்டனை

...

arvoshan.com

நிலுவை BO5, BO7 விண்ணப்பங்களுக்காக மேலதிக சேவை நாட்கள் அறிவிப்பு

...

arvoshan.com

2024–2026 காலப்பகுதியில் சீனாவின் பயிற்சித் திட்டங்களால் 2,481 இலங்கை அரச அதிகாரிகள் பயன்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

...

arvoshan.com

ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்

...

arvoshan.com

வாகனக் கடன் மற்றும் குத்தகை வசதிகளுக்கு இலங்கை மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகள்

...

arvoshan.com

சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் போலிச் செய்திகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது – பொலிஸ் பேச்சாளர்

...

arvoshan.com

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு

...

arvoshan.com

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி அனுப்பிய 9 கடிதங்களுக்கும் பதிலில்லை – தொழிற்சங்க நடவடிக்கைக்கு GMOA எச்சரிக்கை

...

arvoshan.com

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டுக் கொலை: சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

...

arvoshan.com

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு – பொதுமக்களுக்கு சுகாதார எச்சரிக்கை

...

arvoshan.com

தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை – இலங்கை புதிய சாதனை

...

arvoshan.com

இம்ரான் கான் விடுதலை தொடர்பான விவாதத்திற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் தடை

...

arvoshan.com

மொனராகலையில் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 2,100 கஞ்சா செடிகள் மீட்பு – சந்தேகநபர் கைது

...