இலங்கையில் செப்டம்பர் பணவீக்கம் 8% ஆக நீடிப்பு
இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க வீதம் 2026 செப்டம்பர் மாதத்தில் மாற்றம் எதுவுமின்றி 8 சதவீதமாகவே நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைக் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிப்பிடப்பட்ட இந்த பணவீக்க வீதமானது, 2026 ஆகஸ்ட் மாதத்தில் பதிவான அதே 8 சதவீத அளவிலேயே தொடர்வதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, உணவுப் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.5 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்தில் 8.7 சதவீதமாகச் சிறிய அளவில் அதிகரித்துள்ளது.
இருப்பினும், உணவு அல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தைப் போன்று செப்டம்பர் மாதத்திலும் 7.7 சதவீதமாக எந்தவித மாற்றமுமின்றி நிலையாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.