வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரியுடன் சாணக்கியன் சந்திப்பு

arvloshan.com

வடக்கு, கிழக்கு பிராந்தியங்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹாக்கின்ஸுடன் முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்றைய தினம் (30) மட்டக்களப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில், வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் வாழ்வாதார சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளூர் வீதிகளைப் புனரமைப்பதன் மூலம் பிராந்தியத்தின் சுற்றுலாத் துறையை கணிசமாக மேம்படுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகளை பலப்படுத்துவது தொடர்பிலும், தற்போதைய அரசியல் மாற்றங்கள், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விரிவாகக் கவனஞ்செலுத்தப்பட்டது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

இலங்கையில் எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் உயர்வு: சிபெட்கோ அறிவிப்பு

...

arvoshan.com

காதல் விவகார மோதலில் இரு இளைஞர்கள் பலி: 16 வயதுச் சிறுவன் படுகாயம்

...

arvoshan.com

57 முப்படை அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் 'விசிஷ்ட சேவா விபூஷண' பதக்கங்கள் வழங்கி வைப்பு!

...

arvoshan.com

2026 ஆம் ஆண்டின் அந்நியச் செலாவணி ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழு ஒப்புதல்

...

arvoshan.com

சிறுவர் தினத்தில் சிறார்களின் மன சுதந்திரத்தைப் பாதுகாக்க அமைச்சர் சரோஜா போல்ராஜ் அழைப்பு

...

arvoshan.com

பாடசாலை நவீனமயமாக்கல் உலக வங்கித் திட்டம்: பாராளுமன்ற உப குழு தீவிர பரிசீலனை

...

arvoshan.com

எயார்பஸ் வழக்கு: அரவிந்த டி சில்வாவின் 40 மில்லியன் பிணைப்பணம் பறிமுதல்

...

arvoshan.com

ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது கேமராமேன் தாக்குதல்: பொலிஸில் முறைப்பாடு

...

arvoshan.com

இலங்கையில் செப்டம்பர் பணவீக்கம் 8% ஆக நீடிப்பு

...

arvoshan.com

போதைப்பொருள் கட்டுப்பாட்டு சட்டத்தை அக்டோபரில் நிறைவேற்ற ஜனாதிபதி உத்தரவு

...

arvoshan.com

புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்றி வரவு செலவுத் திட்டம்? – சஜித் கேள்வி

...

arvoshan.com

டிட்வா புயலால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க உலக வங்கி 110 மில்லியன் டொலர் கடனுதவி ஒப்புதல்

...

arvoshan.com

நோயாளிகளின் வலியை உணரும் மருத்துவர்களும் மனிதநேயமிக்க பொறியியலாளர்களும் நாட்டிற்குத் தேவை: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவிற்கு பிணை

...

arvoshan.com

ரணில் மீதான நிதி முறைகேடு வழக்கு நவம்பர் 11 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

...