இலங்கையில் அதிக வரி விதிப்புகள் தொடர வேண்டியதன் அவசியம் என்ன? – பொருளாதார நிபுணர் விளக்கம்

arvloshan.com

பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் கடன் மூலம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதற்கு இலங்கை அதிக வரி வருவாயைப் பேண வேண்டியுள்ளதாகப் பொருளாதார நிபுணர் உமேஷ் மொரமுதலி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகப் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர், 1990ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதே காலப்பகுதியில் அரசாங்கத்தின் வரி வருவாய், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 20 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, அரசாங்கத்தின் செலவினங்கள் குறைந்த போதிலும், நாட்டின் கடன் சுமை அதிகரித்ததாகவும், இதன் காரணமாக இலங்கை தற்போது கடினமான பொருளாதாரச் சீராக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் சுமை தற்போது நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில்முறை நிபுணர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் உமேஷ் மொரமுதலி குறிப்பிட்டுள்ளார்.

கடன் பெற்று முன்னெடுக்கப்பட்ட அரசாங்கச் செலவினங்கள் ஊடாகவே இவர்களில் பலரது வாழ்க்கைத் தரம், கல்வி மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் ஓரளவுக்கு ஆதரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"அவற்றுக்கான செலவைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது" எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

அநுராதபுரத்தில் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் இடத்தில் மோதல்!

...

arvoshan.com

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு பொலிஸார் அழைப்பாணை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தயாராகும் எதிர்க்கட்சி – விசேட கலந்துரையாடல்

...

arvoshan.com

அரிசி நுகர்வை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும் – அரச ஊழியர்களுக்கு லால் காந்த அறிவுரை

...

arvoshan.com

பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தோல்வி – அரச நிறுவனங்கள் பல பில்லியன் ரூபா நட்டத்தில்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

ஹோட்டல்களுக்கு சட்டவிரோதமாக வன இறைச்சி விநியோகம்; ஐந்து துப்பாக்கிகள், 100-க்கும் மேற்பட்ட பொறிகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

நெதர்லாந்து வேலைவாய்ப்பு விசா தொடர்பில் மோசடி – பொதுமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

...

arvoshan.com

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் மற்றுமொரு மீன்பிடிப் படகு கடற்படையினரால் மடக்கிப்பிடிப்பு!

...

arvoshan.com

இலங்கையில் இந்த ஆண்டில் 7,000 பேருக்கு எலிக்காய்ச்சல்; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் ஜனாதிபதி

...

arvoshan.com

காவன்திஸ்ஸ யானை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – விசாரணை சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு!

...

arvoshan.com

போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், தேசிய அடையாள அட்டைகள் தயாரிப்பு – இருவர் கைது!

...

arvoshan.com

கனமழை தொடரும் நிலையில் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

...

arvoshan.com

“தவறு! பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்; ஒழுக்காற்று நடவடிக்கையும் அவசியம்” – சுனில் ஹந்துன்னெத்தி

...