இலங்கையில் இந்த ஆண்டில் 7,000 பேருக்கு எலிக்காய்ச்சல்; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

arvloshan.com

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை சுமார் 7,000 பேர் எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் பருவமழை மற்றும் பெரும்போக விவசாயச் செய்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் துஷாரி தபரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 300 பேர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்பதாகக் குறிப்பிட்ட அவர், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளாவிட்டால் அது உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலான எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, தொற்றுநோயியல் பிரிவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகமும் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளன.

குறிப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் சேறு, நீர் தேங்கிய பகுதிகளில் பணியாற்றுவோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியிலும், செப்டெம்பர் முதல் ஜனவரி வரையிலான காலப்பகுதியிலும் மழைக்காலம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் காரணமாக எலிக்காய்ச்சல் தொற்றுப் பரவல் அதிகரிப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறு பரவுகிறது?

எலிக்காய்ச்சல் என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒருவகை பாக்டீரியா தொற்றாகும்.

பாதிக்கப்பட்ட எலிகள் மற்றும் ஏனைய வீட்டு, காட்டு விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர் அல்லது மண் ஊடாக இந்த நோய் பரவுகிறது.

அவ்வாறு மாசடைந்த நீர் அல்லது சேற்றுடன் தொடர்பு கொள்ளும்போது, உடலில் உள்ள காயங்கள், வெட்டுக்காயங்கள் அல்லது பாதிக்கப்பட்ட தோல் பகுதிகள் ஊடாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழையக்கூடும்.

குறிப்பாக வயல் நிலங்களில் பணியாற்றும் விவசாயிகள் மற்றும் வெள்ளநீர் தேங்கிய பகுதிகளில் நடமாடுவோர் அதிக ஆபத்தை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் தொடர்பில் அவதானம்!

எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் டெங்கு மற்றும் காய்ச்சல் நோய்களின் அறிகுறிகளை ஒத்திருக்கக்கூடும் என்பதால், ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவது அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, கடுமையான தலைவலி, தசை வலி, குறிப்பாக கால்கள் மற்றும் பாதங்களில் ஏற்படும் வலி, கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

வயல் நிலங்கள் மற்றும் சேற்றுப் பகுதிகளில் பணியாற்றுவோர் பாதுகாப்புக் காலணிகள் மற்றும் கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், உடலில் உள்ள காயங்களை நீர் புகாத வகையில் மூடிக்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எலிக்காய்ச்சலால் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கு ஆரம்பகட்ட நோயறிதலும் தாமதமின்றிய சிகிச்சையும் மிகவும் அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

இலங்கையில் 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு; குழாய்க் கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோகத்தில் புதிய திட்டங்கள்!

...

arvoshan.com

வீடுகளின் சூரிய மின்சக்தி மின்கல சேமிப்பு கட்டமைப்புக்கு ஒரு kWh-க்கு ரூ.25,000 மானியம்!

...

arvoshan.com

எமிரேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 528 பில்லியன் ரூபா நட்டம் – ஜனாதிபதி

...

arvoshan.com

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் பொலிஸ் காவலில்!

...

arvoshan.com

மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் – விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி மனு தாக்கல்!

...

arvoshan.com

“நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டோம்” – ஜனாதிபதிக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி

...

arvoshan.com

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு 5,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலங்களில் பழச் செய்கை – அரசாங்கம் புதிய திட்டம்

...

arvoshan.com

அநுராதபுரத்தில் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் இடத்தில் மோதல்!

...

arvoshan.com

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு பொலிஸார் அழைப்பாணை

...

arvoshan.com

இலங்கையில் அதிக வரி விதிப்புகள் தொடர வேண்டியதன் அவசியம் என்ன? – பொருளாதார நிபுணர் விளக்கம்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தயாராகும் எதிர்க்கட்சி – விசேட கலந்துரையாடல்

...

arvoshan.com

அரிசி நுகர்வை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும் – அரச ஊழியர்களுக்கு லால் காந்த அறிவுரை

...

arvoshan.com

பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தோல்வி – அரச நிறுவனங்கள் பல பில்லியன் ரூபா நட்டத்தில்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

ஹோட்டல்களுக்கு சட்டவிரோதமாக வன இறைச்சி விநியோகம்; ஐந்து துப்பாக்கிகள், 100-க்கும் மேற்பட்ட பொறிகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

நெதர்லாந்து வேலைவாய்ப்பு விசா தொடர்பில் மோசடி – பொதுமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை

...