2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் ஜனாதிபதி
2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்க இன்று (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதற்கமைய, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார். இது 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பாக அமையும்.
குறித்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவினால் நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குழுநிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.