நெதர்லாந்து வேலைவாய்ப்பு விசா தொடர்பில் மோசடி – பொதுமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை

arvloshan.com

நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி முன்னெடுக்கப்படும் மோசடிகள் தொடர்பில் இலங்கையில் உள்ள நெதர்லாந்து தூதரகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான மோசடிகளில் சிக்கி ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை (12) வெளியிட்டுள்ள அறிக்கையில், நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, வேலை தேடுபவர்களை சில தரப்பினர் ஏமாற்றி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நெதர்லாந்து குடிவரவு அதிகாரிகளால் வழங்கப்பட்டவை எனக் கூறப்படும் போலியான கடிதங்களும் புழக்கத்தில் விடப்படுவதாகத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுவாக, பெரும்பாலான வேலைவாய்ப்புகளுக்காக நெதர்லாந்து வேலை விசாக்களை வழங்குவதில்லை எனத் தெரிவித்துள்ள தூதரகம், உயர்திறன் கொண்ட தொழில்கள் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகள் உள்ளிட்ட சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் உண்மையான வேலைவாய்ப்புகள் காணப்படலாம் என்றும் விளக்கமளித்துள்ளது.

அதேவேளை, நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபடுவதில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

எனவே, வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறுபவர்களுக்கு பணம் செலுத்துவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு வேலைவாய்ப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு இலங்கையர்களிடம் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக இலங்கைச் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் உதவியை நாடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

இலங்கையில் 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு; குழாய்க் கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோகத்தில் புதிய திட்டங்கள்!

...

arvoshan.com

வீடுகளின் சூரிய மின்சக்தி மின்கல சேமிப்பு கட்டமைப்புக்கு ஒரு kWh-க்கு ரூ.25,000 மானியம்!

...

arvoshan.com

எமிரேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 528 பில்லியன் ரூபா நட்டம் – ஜனாதிபதி

...

arvoshan.com

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் பொலிஸ் காவலில்!

...

arvoshan.com

மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் – விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி மனு தாக்கல்!

...

arvoshan.com

“நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டோம்” – ஜனாதிபதிக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி

...

arvoshan.com

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு 5,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலங்களில் பழச் செய்கை – அரசாங்கம் புதிய திட்டம்

...

arvoshan.com

அநுராதபுரத்தில் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் இடத்தில் மோதல்!

...

arvoshan.com

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு பொலிஸார் அழைப்பாணை

...

arvoshan.com

இலங்கையில் அதிக வரி விதிப்புகள் தொடர வேண்டியதன் அவசியம் என்ன? – பொருளாதார நிபுணர் விளக்கம்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தயாராகும் எதிர்க்கட்சி – விசேட கலந்துரையாடல்

...

arvoshan.com

அரிசி நுகர்வை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும் – அரச ஊழியர்களுக்கு லால் காந்த அறிவுரை

...

arvoshan.com

பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தோல்வி – அரச நிறுவனங்கள் பல பில்லியன் ரூபா நட்டத்தில்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

ஹோட்டல்களுக்கு சட்டவிரோதமாக வன இறைச்சி விநியோகம்; ஐந்து துப்பாக்கிகள், 100-க்கும் மேற்பட்ட பொறிகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

...