இலங்கைக்கான ஏழு புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்

arvloshan.com

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இன்று (17) கையளித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம், எகிப்து, லாவோஸ், நமீபியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்தனர்.

இதன்படி, தென் கொரியாவுக்கான தூதுவர் கிம் யூன்-ஜங், சுவிட்சர்லாந்துக்கான தூதுவர் டானியல் ஹுன், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர் சில்வியா ஹார்ட்லீஃப், எகிப்துக்கான தூதுவர் அஹ்மட் எல்-சயீத் அப்தெல் ஹலீம் அமெர் ஹெலால், லாவோஸுக்கான தூதுவர் விதாயா சாயவோங், நமீபியாவுக்கான உயர்ஸ்தானிகர் அலெக்ஸ் எல். டுகுஹுப்வேலே மற்றும் சிங்கப்பூருக்கான உயர்ஸ்தானிகர் பெட்ரிக் டேனியல் ஆகியோர் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இவர்களில் தென் கொரியா, சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எகிப்து ஆகியவற்றின் தூதுவர்கள் கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படவுள்ளதுடன், லாவோஸ் மற்றும் நமீபியாவின் பிரதிநிதிகள் புதுடில்லியைத் தளமாகக் கொண்டும், சிங்கப்பூரின் உயர்ஸ்தானிகர் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டும் செயற்படவுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களால் இத்தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ரணில் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டதாகக் கூறுவது பொய் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

...

arvoshan.com

வட்டவளையில் உணவு ஒவ்வாமை: 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

...

arvoshan.com

சத்தரதன தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை? பொலிஸாரிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்

...

arvoshan.com

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

...

arvoshan.com

சர்வதேச கல்வி ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் இலங்கைப் பல்கலைக்கழகங்கள்

...

arvoshan.com

வருமான இலக்கைத் தாண்டியது உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

...

arvoshan.com

வர்த்தக அமைச்சின் தலையீட்டால் LAUGFS எரிவாயு விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு!

...

arvoshan.com

தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

ஊழல் குற்றச்சாட்டு: ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித விளக்கமறியலில்!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர் அனுமதி வெட்டுப்புள்ளி மதிப்பெண்கள் வெளியீடு!

...

arvoshan.com

தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பு – பொலிஸார் விசேட அறிவுறுத்தல்

...

arvoshan.com

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் அறிவுசார் சொத்துரிமை சேவைக் கட்டணங்களைத் திருத்த நடவடிக்கை

...

arvoshan.com

அஸ்வெசும பயனாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 2 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு

...

arvoshan.com

சிறுமியைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக மாமனும் மருமகனும் மீது குற்றச்சாட்டு

...

arvoshan.com

பிரைம் மெல்வாவுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக அந்தஸ்து

...