இந்தியாவில் பாகிஸ்தான் தொலைக்காட்சித் தொடரின் இரண்டு தனியார் திரையிடல்களும் இரத்து!

arvloshan.com

பாகிஸ்தான் தொலைக்காட்சித் தொடரான ‘Dar-e-Nijaat’ இன் இரண்டு தனியார் திரையிடல் நிகழ்வுகள், சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்தியாவின் பெங்களூருவில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திரையிடல் நிகழ்வுகள் நவம்பர் 28 மற்றும் டிசம்பர் 5 ஆகிய திகதிகளில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தன.

குறித்த நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களில், பாகிஸ்தானிய ஆடைகளை அணிந்து வர வேண்டும் என ஆடை விதிமுறை குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவே சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் எழுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

**ஏற்பாட்டாளர்கள் நிகழ்வுகளை இரத்து செய்தனர்**

நவம்பர் 28ஆம் திகதி Sheesh Kebab நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இரத்துக்கான காரணம் குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை.

அதேவேளை, டிசம்பர் 5ஆம் திகதி நடைபெறவிருந்த மற்றொரு நிகழ்வின் ஏற்பாட்டாளர், அது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய அளவிலான நிகழ்வு எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளதால் நிகழ்வை இரத்து செய்யத் தீர்மானித்துள்ளதாக ஏற்பாட்டாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குறித்த நிகழ்வுகள் தொடர்பாக சமூக வலைத்தளமான X இல் வெளியிடப்பட்ட பதிவொன்று பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

அந்தப் பதிவில், பாகிஸ்தானிய ஆடைகளை அணியுமாறு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைக்கும், பாகிஸ்தான் தொலைக்காட்சித் தொடர்களை இவ்வாறான நிகழ்வுகள் மூலம் ஊக்குவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த பெங்களூரு பொலிஸ் ஆணையாளர் ஆர். ஹிதேந்திரா, நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

நடிகர் சரத்குமாரின் 177ஆவது திரைப்படம் ‘டாக்ஸி’ – தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

...

arvoshan.com

மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘ஓம்: ஆபரேஷன் மோல்’

...

arvoshan.com

இந்தியாவில் முன்பதிவு வசூலில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’!

...

arvoshan.com

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் விஜய் – ரஜினிகாந்த் சந்திப்பு!

...

arvoshan.com

தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

...

arvoshan.com

‘அப்பா குட்டி’க்காக விஜய் ஆண்டனியின் ரயில் பயணம்

...

arvoshan.com

வெளியான ஒரே நாளில் 3.8 பில்லியன் டொலர் வருமானம் – புதிய வரலாறு படைத்த GTA 6!

...

arvoshan.com

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘டோரதி’ தேர்வு

...

arvoshan.com

‘எங்களது மௌனத்தை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்’ – மகள் குறித்த வதந்திகளுக்கு அர்ஜுன் பதிலடி

...

arvoshan.com

“எமது கலாசாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது” – ராதிகா ஆப்தே கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம்

...

arvoshan.com

13 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகிறது GTA 6 – புதிய விளையாட்டு அம்சங்களுடன் அறிமுகம்

...

arvoshan.com

சிம்புதேவனின் ‘நவோரியா’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

...

arvoshan.com

“அடுத்த படம் தமிழில்தான்” – துல்கர் சல்மான் உறுதி!

...

arvoshan.com

பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ‘மூன் வாக்’ டிசம்பர் 24ஆம் திகதி வெளியீடு

...

arvoshan.com

குடும்பத்துடன் கிரீஸில் வலம் வந்த ரஜினிகாந்த் – புகைப்படங்களைப் பகிர்ந்த சவுந்தர்யா

...