இந்தியப் பெருங்கடலில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
இந்தியப் பெருங்கடலில் மொரீஷியஸ் – ரீயூனியன் தீவுகளுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மாலை 5.41 மணிக்கு வெளியிடப்பட்ட சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்ற அறிவிப்பின்படி, குறித்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை மாலை 4.36 மணியளவில் பதிவாகியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட கணிப்புகளின்படி, தெற்கு அட்சரேகை 17.78 பாகையிலும் கிழக்கு தீர்க்கரேகை 65.82 பாகையிலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் கவனத்திற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.