ஆப்பிள் மீது OpenAI வர்த்தக இரகசியக் குற்றச்சாட்டு!

arvloshan.com

ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்திலிருந்து விலகி ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்த முன்னாள் ஊழியர் ஒருவர், இன்னும் வெளியிடப்படாத ஒரு தயாரிப்பு தொடர்பான 100-க்கும் மேற்பட்ட கோப்புகளைத் தனது தனிப்பட்ட கணக்குக்கு அனுப்பியதாக OpenAI குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், அந்தத் தயாரிப்பு குறித்த விளக்கக்காட்சியொன்றை ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு அவர் வழங்கியதாகவும், OpenAI நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சான் ஜோஸ் நகரிலுள்ள மத்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஆவணத்தில், குறித்த விளக்கக்காட்சி பல மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக OpenAI குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தற்போது சொந்தமாக செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகளை உருவாக்கி வருவதாகவும், இந்த வாரம் அதன் HomeView தயாரிப்பு வெளியிடப்பட்டிருப்பதை இதற்கான உதாரணமாகவும் OpenAI சுட்டிக்காட்டியுள்ளது.

வர்த்தக இரகசியங்கள் கசியும் அபாயம்

தனது வர்த்தக இரகசியங்களும் ரகசியத் தகவல்களும் தற்போது ஆப்பிள் நிறுவனத்துக்குள் பரவி வருவது குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.

OpenAI நிறுவனத்தின் ரகசியமான மற்றும் புதுமையான தொழில்நுட்பப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஆப்பிள் நிறுவனத்தின் பொறியியலாளர்கள் அதன் எதிர்காலத் தயாரிப்புகளை உருவாக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தனது நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.

எனினும், OpenAI முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளது.

புதிய ஊழியர்கள் தங்களின் முந்தைய பணியிடங்களிலிருந்து பெறப்பட்ட ரகசியத் தகவல்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான கொள்கைகளும் நடைமுறைகளும் தன்னிடம் இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. அத்துடன், OpenAI முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆதாரத்தையும் தாம் கண்டறியவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

தொடரும் வர்த்தக இரகசிய வழக்கு

கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணம், ஆப்பிள் மற்றும் OpenAI நிறுவனங்களுக்கு இடையில் தொடர்ந்து வரும் வர்த்தக இரகசியங்கள் தொடர்பான சட்டப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தனது நிறுவனத்திலிருந்து விலகிய சில ஊழியர்கள் ரகசியத் தகவல்களை எடுத்துக்கொண்டு OpenAI நிறுவனத்தின் வன்பொருள் (Hardware) பிரிவில் இணைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

எனினும், ஆப்பிள் முன்வைத்த அந்தக் குற்றச்சாட்டுகளை OpenAI ஏற்கனவே மறுத்துள்ளது.

இந்நிலையில், இரு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையிலான இந்தச் சட்டப் பிரச்சினை, செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிலவும் போட்டிக்கு மத்தியில் மேலும் தீவிரமடைந்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

காதல் மோசடிக்காகத் திருடப்பட்ட புகைப்படம்; உண்மையான நபரைத் தேடி வந்த காதல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்!

...

arvoshan.com

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகளை நீக்கும் வரை TikTok சேவையை நிறுத்த ஸ்பெயின் கோரிக்கை

...

arvoshan.com

குழந்தையின் வீடியோவை Snapchat-இல் வெளியிட்ட பெண்ணுக்கு சிறைத் தண்டனை – UAE-யிலிருந்து நாடு கடத்தவும் உத்தரவு

...

arvoshan.com

தினசரி வட்டி வழங்குவதாகக் கூறி 6.52 லட்சம் பேரிடம் ரூ.1,211 கோடி மோசடி!

...

arvoshan.com

போலி வேலைவாய்ப்பு நேர்காணல் மற்றும் AI கருவி மூலம் Binance நிறுவனத்திடமிருந்து 6.3 பில்லியன் டொலர் திருட்டு!

...

arvoshan.com

நினைவகச் சிப் விலை உயர்வு; ஆப்பிள் பங்குகள் 4% சரிவு – லாப வரம்பு குறையும் என புதிய தலைமை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை!

...

arvoshan.com

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள் – இஸ்ரோ அறிவிப்பு

...

arvoshan.com

ChatGPT ஆலோசனையால் வலிப்பு நோய்க்கான மருந்தை நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு – OpenAI நிறுவனத்துக்கு எதிராக பெற்றோர் வழக்குத் தாக்கல்

...

arvoshan.com

AI தொழில்நுட்ப வளர்ச்சி: மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் 60,000 ஊழியர்களுக்கு தன்னார்வ விலகல் திட்டம்

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு விரிவாக்கத்திற்காக 3,500 கோடி டொலர் பங்கு வெளியீடு – மெட்டா அறிவிப்பு

...

arvoshan.com

பொறியியல் படிக்காமலேயே பறக்கும் காரை உருவாக்கி அசத்திய இளைஞர்!

...

arvoshan.com

அரச நிறுவனங்களுக்கு அவசர சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

இணையம் வழியாக வாசனைகளைப் பரிமாறும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!

...

arvoshan.com

இணையத்தள உரிமையாளர்களுக்கு இலங்கை CERT முக்கிய சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

ஹோட்டல் முன்பதிவு பாதுகாப்பானதா? Booking.com நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை!

...