அரச நிறுவனங்களுக்கு அவசர சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

arvloshan.com

இணையத்தளங்கள் மற்றும் இணையப் பயன்பாடுகளில் காணப்படும் முக்கியமான பாதுகாப்புக் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்யுமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

PHP மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள் மற்றும் இணையப் பயன்பாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக, அரச நிறுவனங்களின் கணினிக் கட்டமைப்புகள் அங்கீகரிக்கப்படாத அணுகல், தரவுத் திருட்டு மற்றும் செயற்பாட்டுத் தடைகள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகக்கூடும் என அமைச்சு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண சபைகள், ஆணைக்குழுக்கள், சட்டரீதியான நிறுவனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

**MODE/2026/03 என்ற இலக்கத்தைக் கொண்ட குறித்த சுற்றறிக்கையில், CVE-2026-109618 மற்றும் CVE-2026-109619 ஆகிய குறியீடுகளின் கீழ் இரண்டு பாதுகாப்புக் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.** இந்தச் சுற்றறிக்கையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால கையொப்பமிட்டுள்ளார்.

இதற்கமைய, PHP மென்பொருளைப் பயன்படுத்தும் அனைத்து கணினிக் கட்டமைப்புகள் மற்றும் இணையப் பயன்பாடுகளையும் அடையாளம் கண்டு, அவற்றில் பயன்படுத்தப்படும் மென்பொருள் பதிப்புகளைச் சரிபார்க்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான மென்பொருள் புதுப்பிப்புகளை உடனடியாக நிறுவுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதைக் கண்டறிவதற்காகக் கணினிக் கட்டமைப்புகளின் பதிவுகளை ஆய்வு செய்யுமாறும், உடனடியாகப் புதுப்பிக்க முடியாத அதிக ஆபத்துள்ள கட்டமைப்புகளுக்கான இணைய அணுகலைக் கட்டுப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிவதற்கான விசேட கருவியொன்றை GovTech Sri Lanka உருவாக்கியுள்ளது. இதனை www.govtech.lk/cvesecure என்ற இணைய முகவரியின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி, அரச நிறுவனங்களின் தொழில்நுட்ப அதிகாரிகள் தமது கணினிக் கட்டமைப்புகளில் காணப்படக்கூடிய பாதுகாப்புக் குறைபாடுகளை அடையாளம் காண முடியும்.

தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை கணினி அவசரத் தயார்நிலை அணியான Sri Lanka CERT உடனும் தொடர்புகொண்டு செயற்படுமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் ஏற்படக்கூடிய சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்கும், முக்கியமான அரச தரவுகள் மற்றும் கணினிக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

பொறியியல் படிக்காமலேயே பறக்கும் காரை உருவாக்கி அசத்திய இளைஞர்!

...

arvoshan.com

இணையம் வழியாக வாசனைகளைப் பரிமாறும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!

...

arvoshan.com

இணையத்தள உரிமையாளர்களுக்கு இலங்கை CERT முக்கிய சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

ஹோட்டல் முன்பதிவு பாதுகாப்பானதா? Booking.com நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை!

...

arvoshan.com

உலகம் முழுவதும் அரச மற்றும் வர்த்தக இணையத்தளங்கள் முடக்கம்! PHP மென்பொருளில் கடுமையான பாதுகாப்புக் குறைபாடு

...

arvoshan.com

செவ்வாய் கிரகத்தின் மர்ம நிலவுகளை ஆய்வு செய்ய ஜப்பானின் புதிய விண்வெளித் திட்டம்!

...

arvoshan.com

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி AI உள்ளிட்ட 40 தொழில்நுட்பங்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க சீனா திட்டம்!

...

arvoshan.com

பறக்கும் திறன் கொண்ட புதிய டெஸ்லா ரோட்ஸ்டரை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்!

...

arvoshan.com

ஆப்பிள் மீது OpenAI வர்த்தக இரகசியக் குற்றச்சாட்டு!

...

arvoshan.com

வீட்டு உபயோகத்திற்காக 'ஹோம்வியூ' ஸ்மார்ட் சாதனத்தை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்!

...

arvoshan.com

டிக் டாக் செயலிக்கு எதிராக நியூயோர்க்கில் வழக்கு: சிறுவர்களுக்கு ‘போலி’ பாதுகாப்பு அம்சங்கள் வழங்கி மோசடி

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோசாப்ட்

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு சர்ச்சை: நிகான் அறிவியல் ஒளிப்பட போட்டி வெற்றிப் பதிவு மீண்டும் ஆய்வு!

...

arvoshan.com

இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி: எலான் மஸ்க் சர்ச்சைக் கருத்து

...

arvoshan.com

சமூக ஊடகங்களால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: ஆய்வில் தகவல்!

...