அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகத் தெரிவானார் அப்துல் அல்-சயீத்!
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் அல்-சயீத் வெற்றிபெற்று, அந்நாட்டின் வரலாற்றில் செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவைப் பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸைத் தோற்கடித்து அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
கடுமையான அரசியல் விமர்சனங்கள், தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் ஜனநாயகக் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே அல்-சயீத் தேர்தலை எதிர்கொண்டார்.
பிரசாரத்தின்போது அல்-சயீதின் அரசியல் கொள்கைகளையும் இஸ்ரேல் தொடர்பான நிலைப்பாட்டையும் ரோஜர்ஸ் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது மத நம்பிக்கையும் பிரசாரத்தில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த அல்-சயீதின் ஆதரவாளர்கள், வெற்றி உறுதியானதும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வெற்றி உரையாற்ற அவர் மேடைக்கு வந்தபோது, ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.