அகதியாக 7 வயதில் தமிழகம் வந்த இலங்கை இளைஞர் – 30 ஆண்டுகளாக அடையாளம் தேடும் அவலம்!

arvloshan.com

இலங்கையைச் சேர்ந்த சிறுவனாக தனது ஏழாவது வயதில் தமிழகத்திற்கு வந்த இளைஞர் ஒருவர், சுமார் 30 ஆண்டுகளாக அடையாள ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், தனக்கு அடையாள அட்டை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த 37 வயதான ஜோய் என்ற இளைஞரே இவ்வாறு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனுவொன்றை கையளித்துள்ளார்.

மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், 1997ஆம் ஆண்டு தனது தந்தையுடன் மீன்பிடிப் படகில் சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்தியாவுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அப்போது படகில் தனது தந்தை உள்ளிட்ட பெற்றோர் எவரும் இருக்கவில்லை என்றும், ராமேஸ்வரத்தில் இந்திய பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு மண்டபம் இலங்கைத் தமிழர் அகதி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது தனக்கு ஏழு வயது என்பதால், அங்கிருந்து சிறுவர் காப்பகம் ஒன்றுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் வளர்ந்த நிலையில், 2014ஆம் ஆண்டு மீண்டும் மண்டபம் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அதிகாரிகள் தனது அடையாள அட்டை மற்றும் பெற்றோர் தொடர்பான விவரங்களைக் கேட்டதாகவும், அவை எதுவும் தன்னிடம் இல்லாத காரணத்தால் இலங்கைக்குச் செல்ல முயன்றதாகக் கூறி புழல் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த பின்னர், தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அதன்பின்னர் மீண்டும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

எனினும், அங்கும் தனக்கு அடையாள ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்றும், உணவு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், முகாமை விட்டு வெளியேறுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை அணுகி தனது நிலைமையை எடுத்துரைத்த போதிலும், பெற்றோருடன் மீண்டும் இணைப்பதற்கோ அல்லது தனது பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்து, தன்னை இலங்கைக்கு அனுப்புமாறோ அல்லது இந்தியாவில் வாழ்வதற்கு அடையாள அட்டை வழங்குமாறோ கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டை இல்லாத காரணத்தால் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், வாழ்வதற்கான வழியின்றி பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.

தற்போது பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் தங்கியிருந்து கிடைக்கும் உணவை உட்கொண்டு வருவதாகவும், சிலருக்கு கால்பந்து பயிற்சி வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் ஜோய் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தனது நிலைமையைக் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் அடையாள அட்டை பெற்றுத்தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கியூ பிரிவு பொலிஸார், ஜோயிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் மேலும் வரிக்குறைப்புகள் – ஜனாதிபதி அநுர குமார அறிவிப்பு!

...

arvoshan.com

காட்டு யானையைப் பிடிக்க அல்லது காயப்படுத்த பொறி வெடி வைத்த நபருக்கு ரூ. 3 இலட்சத்து 10 ஆயிரம் அபராதம்!

...

arvoshan.com

கொழும்பில் 5.96 கோடி ரூபாய் நிதி மோசடி – தனியார் நிறுவன ஊழியர் கைது!

...

arvoshan.com

மீண்டும் இலங்கைக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள்!

...

arvoshan.com

நவம்பர் 2 முதல் மீண்டும் இணையவழி முன்பதிவு முறை அமுல்!

...

arvoshan.com

திருடனைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் – திருடப்பட்ட கைப்பேசியை மீட்டார்!

...

arvoshan.com

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 51.5 சதவீதத்தால் அதிகரிப்பு – 4.5 பில்லியன் டொலரை எட்டியது

...

arvoshan.com

2026ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இலங்கையர்கள் செலவிட்ட தொகை 62% அதிகரிப்பு!

...

arvoshan.com

நாளை முதல் முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

...

arvoshan.com

ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய மின்தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகின் செயலிழப்பே காரணம் – ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை

...

arvoshan.com

வாட்ஸ்அப் ஊடாகப் பரிசுப் பொதி வழங்குவதாகக் கூறி 14.5 இலட்சம் ரூபாய் மோசடி – பெண் கைது!

...

arvoshan.com

வாகன இறக்குமதிச் செலவில் செப்டம்பரில் 34.4% வீழ்ச்சி!

...

arvoshan.com

நிறுவனங்களுக்கு இறுதி எச்சரிக்கை – ஒரு மில்லியன் ரூபா அபராதம், 10 ஆண்டுகள் சிறை!

...

arvoshan.com

பொதுநலவாய உச்சி மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கும் பிரதமர் ஹரிணி!

...

arvoshan.com

தங்கத்தைப் பறிக்க வர்த்தகரை சித்திரவதை செய்த பொலிஸார் – மூன்று அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

...