‘ஃபஹத் பாசிலுக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன’: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

arvloshan.com

மலையாளத் திரையுலகின் பிரபல முன்னணி நடிகரான ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don't Trouble The Trouble) திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல தென்னிந்திய நடிகர் சூர்யா, ஃபஹத் பாசிலுடனான தனது நெகிழ்ச்சியான நட்பைப் பற்றிப் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய நடிகர் சூர்யா, "இந்த இனிய மாலைப் பொழுதில் இவர்களுடன் இணைந்திருப்பது ஒரு குடும்ப உறவைப் போன்ற உணர்வைத் தருகிறது. திரைப்படத் துறையின் மிகச்சிறந்த அழகே, அது நம்மைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பதுதான். அந்த வகையில், பிரபல இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் (S. S. Rajamouli) தயாரிப்பில் ஃபஹத் பாசில் நடித்திருப்பது ஒரு பெரும் ஆச்சரியமாகும். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இத்திரைப்படத்தை திரையில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்," எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஃபஹத் பாசிலுடனான நட்பு குறித்துப் பேசிய சூர்யா, "ஃபஹத் என்னை ‘அண்ணா’ என்று அழைப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து ஏராளமான நேரங்களைச் செலவழித்திருக்கிறோம். விடிய விடியப் பல விடயங்கள் குறித்துப் பேசியுள்ளோம். திரையுலகில் எங்களது ஆரம்பக்காலப் பயணத்தின்போது எதிர்கொண்ட சவால்கள், தடைகள் மற்றும் எங்களது வாழ்க்கை அனுபவங்களில் உள்ள ஒற்றுமைகள் குறித்துப் பல நினைவுகளைப் பகிர்ந்துள்ளோம். நாங்கள் இருவரும் எடுத்தவுடனேயே திரையுலகில் உச்சத்தை அடைந்துவிடவில்லை; பல போராட்டங்கள் மற்றும் பின்னடைவுகளுக்குப் பிறகே இந்த இடத்தை அடைந்துள்ளோம்," என்று தெரிவித்தார்.

மேலும், ஃபஹத் பாசிலின் நடிப்புத்திறனைப் பாராட்டிய சூர்யா, "திரைப்படங்களில் நடிக்கும்போது ரசிகர்கள் இதனை விரும்புவார்களா என்ற கணக்கீடுகளுடன் நாம் கதைகளைத் தேர்ந்தெடுப்பதுண்டு. ஆனால், ஃபஹத் எந்தவிதக் கணக்கீடுகளுமின்றி, கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மட்டுமே கருத்தில் கொண்டு திரைப்படங்களைத் தேர்வு செய்கிறார். அதனால்தான் மிகச்சிறந்த படைப்புகள் அவரைத் தேடி வருகின்றன. அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பல விடயங்கள் உள்ளன," என்றும் புகழாரம் சூட்டினார்.

ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் ஃபஹத் பாசில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்தை 'ஷோயிங் பிசினஸ்' நிறுவனத்தின் சார்பில் எஸ். எஸ். கார்த்திகேயாவும், ‘பாகுபலி’ படத்தை தயாரித்த 'ஆர்கா மீடியா வொர்க்ஸ்' (Arka Media Works) நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘டோரதி’ திரைப்படம்: கார்த்திக் சுப்புராஜுக்கு திருநர்கள் சமூகம் வரவேற்பு

...

arvoshan.com

நடிகை ரகுல் பிரீத் சிங் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

...

arvoshan.com

‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

...

arvoshan.com

கைவிடப்பட்ட திரைப்படம் தொடர்பான சர்ச்சை: வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் விளக்கம்!

...

arvoshan.com

‘டி56’ திரைப்படப் பூஜை மானாமதுரையில் கோலாகலம்: தனுஷ், வடிவேலு நெகிழ்ச்சி உரை

...

arvoshan.com

‘சாதி’ எனும் சவாலை எதிர்கொள்ளும் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ : திரைப்பட அறிமுகம்

...

arvoshan.com

சில்க் ஸ்மிதாவின் நிறைவேறாத ஆசை: நடிகை குஷ்பு உருக்கம்

...

arvoshan.com

லெனின் பாண்டியன்: 4 நாட்கள் வெயிலில் நின்று பயிற்சி பெற்ற தர்ஷன்!

...

arvoshan.com

சசிகுமாரின் ‘நந்தன் 2’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

...

arvoshan.com

‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ்!

...

arvoshan.com

ஆஸ்திரேலிய நாடாளுமன்றில் இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவம்: சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!

...

arvoshan.com

அர்ஜுன் தாஸின் புதிய படம்: தமிழில் அறிமுகமாகும் ப்ரீத்தி பகதாலா!

...

arvoshan.com

அரசியல் உறுதிமிக்க தலைமுறையை உருவாக்குகிறார் முதலமைச்சர் விஜய்: இயக்குநர் அட்லீ

...

arvoshan.com

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் ‘மகாராஜா’: சம்பளமின்றி நடிக்கத் தயார் என விஜய் சேதுபதி விருப்பம்!

...

arvoshan.com

தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சை: 'மண்டாடி' பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி விளக்கம்

...