நடிகை ரகுல் பிரீத் சிங் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

arvloshan.com

நிதி முறைகேடு தொடர்பான புகார்களின் அடிப்படையில், பிரபல திரை நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திரைப்பட தயாரிப்பிற்கு நிதி வழங்குவதாகக் கூறி, வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக நிதியைத் திசைதிருப்பியதாக எழுந்துள்ள சந்தேகங்களின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடிகை ரகுல் பிரீத் சிங், அவரது மாமனாரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான வாசு பக்னானி (Vashu Bhagnani) மற்றும் 'பனோரமா ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்துடன் தொடர்புடைய மும்பையிலுள்ள 12 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனையைத் தொடங்கினர்.

மும்பை வருமான வரித்துறையைச் சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சந்தேகத்திற்குரிய வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகள், கணக்கு ஆவணங்கள் மற்றும் நிதிப் பதிவேடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சகோதரர் மீதான போதைப்பொருள் வழக்கு பின்னணி:

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 43 கிராம் கொக்கைன் (Cocaine) மற்றும் 11.5 கிராம் எம்.டி.எம்.ஏ (MDMA) ஆகிய போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்களிடம் இருந்து, நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரரான அமன் பிரீத் சிங் ஐந்து முறை போதைப்பொருள்களைப் பெற்றதாக மும்பை காவல்துறை குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் 'தடையறத் தாக்க', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'என்.ஜி.கே' (NGK), 'இந்தியன் 2' (Indian 2) உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ள ரகுல் பிரீத் சிங், வரவிருக்கும் 'இந்தியன் 3' மற்றும் பிரம்மாண்டமான 'ராமாயணா' (Ramayana) திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதி முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘டோரதி’ திரைப்படம்: கார்த்திக் சுப்புராஜுக்கு திருநர்கள் சமூகம் வரவேற்பு

...

arvoshan.com

‘ஃபஹத் பாசிலுக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன’: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

...

arvoshan.com

‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

...

arvoshan.com

கைவிடப்பட்ட திரைப்படம் தொடர்பான சர்ச்சை: வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் விளக்கம்!

...

arvoshan.com

‘டி56’ திரைப்படப் பூஜை மானாமதுரையில் கோலாகலம்: தனுஷ், வடிவேலு நெகிழ்ச்சி உரை

...

arvoshan.com

‘சாதி’ எனும் சவாலை எதிர்கொள்ளும் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ : திரைப்பட அறிமுகம்

...

arvoshan.com

சில்க் ஸ்மிதாவின் நிறைவேறாத ஆசை: நடிகை குஷ்பு உருக்கம்

...

arvoshan.com

லெனின் பாண்டியன்: 4 நாட்கள் வெயிலில் நின்று பயிற்சி பெற்ற தர்ஷன்!

...

arvoshan.com

சசிகுமாரின் ‘நந்தன் 2’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

...

arvoshan.com

‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ்!

...

arvoshan.com

ஆஸ்திரேலிய நாடாளுமன்றில் இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவம்: சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!

...

arvoshan.com

அர்ஜுன் தாஸின் புதிய படம்: தமிழில் அறிமுகமாகும் ப்ரீத்தி பகதாலா!

...

arvoshan.com

அரசியல் உறுதிமிக்க தலைமுறையை உருவாக்குகிறார் முதலமைச்சர் விஜய்: இயக்குநர் அட்லீ

...

arvoshan.com

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் ‘மகாராஜா’: சம்பளமின்றி நடிக்கத் தயார் என விஜய் சேதுபதி விருப்பம்!

...

arvoshan.com

தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சை: 'மண்டாடி' பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி விளக்கம்

...