மணிகண்டனின் 'மக்கள் காவலன்' டிசம்பர் 4இல் வெளியீடு!

arvloshan.com

நடிகர் மணிகண்டன் நடித்துள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

'ஜெய் பீம்' (Jai Bhim), 'லவ்வர்' (Lover), 'குடும்பஸ்தன்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், 'குடும்பஸ்தன்' திரைப்படத்தைத் தொடர்ந்து புதிய திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக 'நீலம் ஸ்டூடியோஸ்' (Neelam Studios) நிறுவனம் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது. உங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்; 'மக்கள் காவலன்' திரைப்படம் டிசம்பர் 4 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், திரைப்படப் பிரிவு வெளியிட்ட சிறப்பு காணொளி (Video) ஒன்றில் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் நண்பர்கள் பலர் மணிகண்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளதோடு, பார்த்தீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு பணிகளையும், அருள் மோசஸ் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

கணினித் தொழில்நுட்பத்தில் 'யாழி': 'அன்னக்கிளியே' சுயாதீன பாடல் வெளியீடு!

...

arvoshan.com

மைசூரில் 'தர்மன்' படப்பிடிப்பு: ஆட்டோவில் வந்து ரசிகர்களை நெகிழ வைத்த ரஜினிகாந்த்!

...

arvoshan.com

‘டோரதி’ திரைப்படம்: கார்த்திக் சுப்புராஜுக்கு திருநர்கள் சமூகம் வரவேற்பு

...

arvoshan.com

‘ஃபஹத் பாசிலுக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன’: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

...

arvoshan.com

நடிகை ரகுல் பிரீத் சிங் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

...

arvoshan.com

‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

...

arvoshan.com

கைவிடப்பட்ட திரைப்படம் தொடர்பான சர்ச்சை: வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் விளக்கம்!

...

arvoshan.com

‘டி56’ திரைப்படப் பூஜை மானாமதுரையில் கோலாகலம்: தனுஷ், வடிவேலு நெகிழ்ச்சி உரை

...

arvoshan.com

‘சாதி’ எனும் சவாலை எதிர்கொள்ளும் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ : திரைப்பட அறிமுகம்

...

arvoshan.com

சில்க் ஸ்மிதாவின் நிறைவேறாத ஆசை: நடிகை குஷ்பு உருக்கம்

...

arvoshan.com

லெனின் பாண்டியன்: 4 நாட்கள் வெயிலில் நின்று பயிற்சி பெற்ற தர்ஷன்!

...

arvoshan.com

சசிகுமாரின் ‘நந்தன் 2’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

...

arvoshan.com

‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ்!

...

arvoshan.com

ஆஸ்திரேலிய நாடாளுமன்றில் இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவம்: சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!

...

arvoshan.com

அர்ஜுன் தாஸின் புதிய படம்: தமிழில் அறிமுகமாகும் ப்ரீத்தி பகதாலா!

...