ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு 5,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலங்களில் பழச் செய்கை – அரசாங்கம் புதிய திட்டம்

arvloshan.com

இலங்கையில் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு வணிக ரீதியிலான பழச் செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில், பயன்படுத்தப்படாமல் காணப்படும் 5,039 ஹெக்டேயர் நிலப்பரப்பை விவசாயத்திற்காக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் மூலம் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத மேட்டுநிலப் பகுதிகளைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த வணிக ரீதியிலான விவசாய நிலங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் தகவலின்படி, மாம்பழம், கொய்யா, வாழைப்பழம், பப்பாசி மற்றும் பாசிப்பழம் உள்ளிட்ட சர்வதேச சந்தையில் அதிக கேள்வியுள்ள பழ வகைகளைப் பயிரிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீர் வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் சிறிய நீர்த்தேக்கக் கட்டமைப்புகளையும் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த புதன்கிழமை (11) அனுராதபுரத்தில் நடைபெற்றன. விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

அனுராதபுரத்திலுள்ள அறுவடைக்குப் பிந்தைய முகாமைத்துவத்திற்கான தேசிய நிறுவனம் மற்றும் C வங்கி வளாகம் ஆகிய இடங்களில் இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பழ மரங்கள் முழுமையான விளைச்சலைத் தரும் நிலையை அடையும் வரை ஆரம்பகால வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில், மிளகாய், நிலக்கடலை, தர்பூசணி, பச்சைப்பயறு மற்றும் எள் போன்ற இடைநிலைப் பயிர்ச்செய்கைகளிலும் விவசாயிகளை ஈடுபடுத்துவதற்கு ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

மேலும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதையும் காலநிலைக்கு ஏற்ற நீர் முகாமைத்துவத்தையும் ஊக்குவிக்கும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும் அழுத்தக் குழாய் நீர் விநியோகக் கட்டமைப்புகள் ஊடாகப் புதிய விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கப்படவுள்ளது.

வடமத்திய மாகாண பிரதான கால்வாய்த் திட்டம் நிறைவடையும் வரை, தெரிவுசெய்யப்பட்ட நீர்த்தேக்கக் கட்டமைப்புகளில் ஏற்கனவே காணப்படும் நீர் மூலங்களைப் பயன்படுத்தி மேட்டுநிலப் பயிர்ச்செய்கையை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே வணிக ரீதியிலான விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் சுமார் 2,000 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

விவசாய உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துதல், உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் சர்வதேச சந்தையின் கேள்விக்கு ஏற்ப இலங்கையின் விவசாயப் பொருட்களைத் தயார்ப்படுத்துதல் ஆகியவற்றை இந்தத் திட்டம் முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

இலங்கையில் 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு; குழாய்க் கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோகத்தில் புதிய திட்டங்கள்!

...

arvoshan.com

வீடுகளின் சூரிய மின்சக்தி மின்கல சேமிப்பு கட்டமைப்புக்கு ஒரு kWh-க்கு ரூ.25,000 மானியம்!

...

arvoshan.com

எமிரேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 528 பில்லியன் ரூபா நட்டம் – ஜனாதிபதி

...

arvoshan.com

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் பொலிஸ் காவலில்!

...

arvoshan.com

மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் – விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி மனு தாக்கல்!

...

arvoshan.com

“நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டோம்” – ஜனாதிபதிக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி

...

arvoshan.com

அநுராதபுரத்தில் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் இடத்தில் மோதல்!

...

arvoshan.com

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு பொலிஸார் அழைப்பாணை

...

arvoshan.com

இலங்கையில் அதிக வரி விதிப்புகள் தொடர வேண்டியதன் அவசியம் என்ன? – பொருளாதார நிபுணர் விளக்கம்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தயாராகும் எதிர்க்கட்சி – விசேட கலந்துரையாடல்

...

arvoshan.com

அரிசி நுகர்வை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும் – அரச ஊழியர்களுக்கு லால் காந்த அறிவுரை

...

arvoshan.com

பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தோல்வி – அரச நிறுவனங்கள் பல பில்லியன் ரூபா நட்டத்தில்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

ஹோட்டல்களுக்கு சட்டவிரோதமாக வன இறைச்சி விநியோகம்; ஐந்து துப்பாக்கிகள், 100-க்கும் மேற்பட்ட பொறிகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

நெதர்லாந்து வேலைவாய்ப்பு விசா தொடர்பில் மோசடி – பொதுமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

...