2027 முதல் இஸ்ரேல் வேலைவாய்ப்புகள் அரசாங்க ஒப்பந்தங்கள் ஊடாக மட்டுமே!

arvloshan.com

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள், 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் அரசாங்கங்களுக்கு இடையிலான (G-to-G) ஒப்பந்தங்கள் ஊடாக மட்டுமே முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அரசாங்கம் எடுத்துள்ள புதிய கொள்கைத் தீர்மானம் தொடர்பில், அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

இதன்படி, உரிமம் பெற்ற தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக இஸ்ரேலுக்கு இலங்கையர்களைத் தெரிவு செய்து அனுப்பும் தற்போதைய நடைமுறை, 2026 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

கட்டுமானம், கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகள் உள்ளிட்ட அனைத்து வேலைவாய்ப்புத் துறைகளுக்கும் இந்தப் புதிய கொள்கை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குறித்த துறைகளில் தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

எனினும், 2027ஆம் ஆண்டுக்கான புதிய ஆட்சேர்ப்பு முறைமை, வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகள் மற்றும் பணியாளர்களைத் தெரிவு செய்யும் நடைமுறைகள் தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

பணம் செலுத்த வேண்டாம் என எச்சரிக்கை!

இந்நிலையில், இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற விரும்புவோர், தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் வழங்கும் உறுதிமொழிகள் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறும் தனிநபர்கள் அல்லது உரிமம் பெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எவ்வித பணத்தையும் செலுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை தனியார் முகவர் நிலையங்களால் ஏற்பாடு செய்யப்படும் திறன் பரிசோதனைகள், நேர்முகத் தேர்வுகள் மற்றும் ஏனைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புத் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்போது, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, அத்துடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியம் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் நம்புமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பணம் செலுத்தியவர்கள் கவலைப்படத் தேவையில்லை!

இதற்கிடையில், இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக சட்டபூர்வமாக ஏற்கனவே பணம் செலுத்தியவர்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பணம் செலுத்தியவர்கள் தொடர்பான விபரங்களைக் கோரி, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களிடம் பணியகம் தகவல்களைப் பெற்றுவருகிறது.

குறித்த தகவல்கள் கிடைத்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது விபரங்களைத் தனியாகச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், மேலதிக அறிவுறுத்தல்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் பணியகம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும், வேலைவாய்ப்பு மோசடிகள் அல்லது ஏனைய குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விரும்புவோர், பணியகத்தின் தற்போதைய முறைப்பாட்டுப் பொறிமுறையின் ஊடாகத் தொடர்ந்து முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கையர்களின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கைத் தூதரகம் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து பணியகம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மூச்சுத்திணறல் அபாயம் – கொழும்பில் 12,000 கோலி சோடா போத்தல்கள் பறிமுதல்!

...

arvoshan.com

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

...

arvoshan.com

800 படுக்கைகள் இருந்தும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத KDU மருத்துவமனை – COPE அதிருப்தி!

...

arvoshan.com

GSP+ வரிச்சலுகையைப் பாதுகாக்க சட்டமூலங்களை மறுபரிசீலனை செய்யுமாறு வர்த்தக சம்மேளனம் கோரிக்கை

...

arvoshan.com

இலங்கையில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு!

...

arvoshan.com

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள்: GSP+ சலுகையை இலங்கை இழக்க நேரிடும் – சஜித் எச்சரிக்கை

...

arvoshan.com

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய வேலைநிறுத்தம்!

...

arvoshan.com

கடும் மின்னல் தாக்கம் குறித்து 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டுடன் பொறுப்புகளும் அதிகரிக்கின்றன – பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: நவம்பர் 2ஆம் திகதி நாடளாவிய வேலைத்திட்டம்

...

arvoshan.com

தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு ஏக்கருக்கு ரூ. 10 இலட்சம் வரை காப்புறுதி!

...

arvoshan.com

கொபேகனே பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு – ஐந்து கிராமவாசிகள் கைது!

...

arvoshan.com

ரூ.454 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன், எக்ஸ்டசி போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது!

...

arvoshan.com

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: மனித உரிமை மீறல்கள் குறித்து HRW எச்சரிக்கை!

...

arvoshan.com

தங்கக் கடத்தல் வழக்கில் இலங்கையருக்கு விடுதலை - ஒரு வருட சிறைத்தண்டனைக்குப் பின்னர் தீர்ப்பு!

...