2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (12) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே குறித்த முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால், குறித்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைய, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார்.