2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றமில்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு
2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் மின்சாரக் கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2026 நவம்பர் 9ஆம் திகதி தேசிய முறைமை இயக்குநரகம் (NSO) சமர்ப்பித்த செலவுத் தரவுகளை ஆய்வு செய்தபோது, இறுதிக் காலாண்டில் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான செலவு 2.88 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை தெரியவந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், இந்தப் புதிய செலவுத் தரவுகளையும் பொதுமக்களின் கருத்துக் கோரலின்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் கவனத்தில் கொண்ட ஆணைக்குழு, 2026ஆம் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கும் மூன்றாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்சாரக் கட்டண முறையையே தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது.