ஹாலிவுட்டில் மறுஆக்கம் செய்யப்படுகிறது தமிழ் திரைப்படமான ‘மகாராஜா’!

arvloshan.com

தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் மறுஆக்கம் (Remake) செய்யப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியின் 50-ஆவது திரைப்படமாக வெளியான ‘மகாராஜா’, திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. அத்துடன், டிஜிட்டல் தளங்களிலும் (OTT) சீனாவிலும் வெளியாகி உலகளாவிய ரீதியில் சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்நிலையில், ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தின் மறுஆக்க உரிமையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் மறுஆக்கம் செய்யப்படும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையை ‘மகாராஜா’ திரைப்படம் படைத்துள்ளது.

இப்படத்தின் ஹாலிவுட் மறுஆக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கோனஹி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் எதிர்வரும் ஆண்டில் (2027) ஆரம்பமாகவுள்ளதாகவும் படத்தின் இணைத் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் நித்திலன் சாமிநாதன், படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் தொடர்ந்து கிடைத்து வரும் இந்த சர்வதேச அங்கீகாரம் தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தாம் தற்போது ‘மகாராஜா 2’ திரைப்படத்திற்கான திரைக்கதை எழுத்துப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் அறியத் தந்துள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சை: 'மண்டாடி' பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி விளக்கம்

...

arvoshan.com

வருமான வரி வழக்குகள்: நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் மனுக்கள் தள்ளுபடி!

...

arvoshan.com

நடிகர் அஜித்குமாரின் ‘டேர் டெவில்’ திரைப்பட படப்பிடிப்பு நவம்பர் 2-ஆம் திகதி ஆரம்பமாகிறது!

...

arvoshan.com

‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

துருவ் விக்ரமின் 'ஜாக்கி' பட முதல் பார்வை வெளியீடு!

...

arvoshan.com

உளவியல் ரீதியான அமானுஷ்ய படமாக உருவாகிறது ‘மண்டவெட்டி’

...

arvoshan.com

சூர்யா - ஜோதிகா 20-வது திருமண நாள்: உணர்வுபூர்வமான உறுதிமொழிப் பதிவு!

...

arvoshan.com

விக்ரமின் ‘பவர் ஹவுஸ்’ படத்தின் அதிரடி தலைப்பு மற்றும் ப்ரொமோ வெளியீடு!

...

arvoshan.com

அரசியல் களத்தில் மிரட்ட வரும் கவுதம் கார்த்திக்: வெளியானது ‘பிளடி பாலிடிக்ஸ்’ டீசர்!

...

arvoshan.com

‘ராஜா, நீயுமா லேட்டு?’ – நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நினைவுகூர்ந்த இளையராஜா!

...

arvoshan.com

'டோரதி' திரைப்படத்திற்கு டொரான்டோ விழாவில் எழுச்சிமிக்க வரவேற்பு

...

arvoshan.com

15 ஆண்டுகளின் பின்னர் ஜெயா தொலைக்காட்சியில் மீண்டும் களமிறங்கும் ‘ஜாக்பாட்’

...

arvoshan.com

விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியின் ‘பத்தா’: அக்டோபர் 1 இல் திரைக்கு வருகின்றது

...

arvoshan.com

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு

...

arvoshan.com

பாடல்கள் பதிப்புரிமை விவகாரம்: இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் புதிய சிக்கல்

...