ஷிரான் பாசிக்கின் தந்தை அக்டோபர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் என்பவரின் தந்தையான அப்துல் ரசாக் முகமட் பாசிக், எதிர்வரும் அக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இந்நடவடிக்கை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடம்பர சொகுசு வீடொன்றை தனது பெயரில் கொள்முதல் செய்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே, சந்தேகநபர் கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சொகுசு வீடானது, ஷிரான் பாசிக்கின் போதைப்பொருள் கடத்தல் மூலமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான மேல் அதிகமான விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.