22ஆவது திருத்தம் 'அரசனின் புதிய ஆடைகள்' போன்றது: சஜித் சாடல்

arvloshan.com

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமானது நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீர்குலைத்து, அதிகாரப் பகிர்வினை பலவீனப்படுத்தி, நீதித்துறை மீதான நிறைவேற்று அதிகாரத்தின் செல்வாக்கை அதிகரிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 22ஆவது அரசியலமைப்புத் திருச்சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையிலேயே இந்த 22ஆவது திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், இம்மாற்றங்கள் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கும் எனக் குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க சபை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையை இத்திருத்தம் பலவீனப்படுத்தும் என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் புகழ்பெற்ற 'அரசனின் புதிய ஆடைகள்' (The Emperor's New Clothes) என்ற சிறுவர் கதையை மேற்கோள் காட்டி உரையாற்றிய சஜித் பிரேமதாச, ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அரசாங்கம் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவருவதாகக் நாடகமாடுகிறது என்றும், ஆனால் நடைமுறையில் இதன் விளைவு முற்றிலும் எதிரானதாகவே அமையும் என்றும் சாடினார்.

நாட்டின் கடந்தகால அரசியலமைப்பு வரலாற்றுத் திருத்தங்களான 17, 18, 19, 20 மற்றும் 21ஆவது திருத்தங்களை நினைவுகூர்ந்த அவர், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மாறிமாறி விரிவுபடுத்தப்பட்டதையும் கட்டுப்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். பல ஆண்டுகளாக இவ்வாறான பல்வேறு மாறுபட்ட திருத்தங்களுக்கு ஆதரவளித்து வந்த அரசியல்வாதிகளை விமர்சித்த அவர், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் நிறுவன ரீதியான பாதுகாப்புகளைப் பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்தக் கூடாது என்றார்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தொடர்பான சர்ச்சை மற்றும் அதனைத் தொடர்ந்து நீதித்துறையில் ஏற்பட்ட முரண்பாடுகளைக் சுட்டிக்காட்டிய அவர், நீதித்துறை சுயாதீனம் குறித்து அரசியல்வாதிகள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எப்போதும் முன்னின்று உழைத்துள்ளது என்றும், இந்தச் சட்டமூலத்தை தமது கட்சி தொடர்ந்து எதிர்க்கும் என்றும் உறுதியளித்தார்.

இத்திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாகப் பல சட்ட அமைப்புகள் ஏற்கனவே எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளதாகவும், உரிய தரப்பினருடன் போதிய கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், அரசியலமைப்பின் 83ஆவது சரத்தின்படி 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சரத்துகளுக்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன், 2ஆவது சரத்தின் வாசகங்களில் மாற்றங்களைச் செய்யுமாறு பணித்துள்ளது. மேலும், முன்மொழியப்பட்டுள்ள 6 ஆண்டுகால பதவிக் கால எல்லை, இச்சட்டம் அமலுக்கு வரும்போது பதவியில் இருக்கும் பிரதம நீதியரசருக்குப் பொருந்தாது என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகாரக் முறைமையை ஒழிப்பதாகத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த அரசாங்கம், தற்போது அதற்கு மாறாக இவ்வாறானதொரு திருத்தத்தை ஏன் முன்னெடுக்கிறது எனக் கேள்வி எழுப்பிய சஜித் பிரேமதாச, தத்துவஞானி ஜான் லாக்கின் "சட்டம் எங்கு முடிகிறதோ, அங்கு சர்வாதிகாரம் தொடங்குகிறது" என்ற கூற்றையும் மேற்கோள் காட்டினார்.

அரசாங்கம் அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மீது தனது அரசியல் கட்டுப்பாட்டை விரிவாக்க முயல்வதாகவும், ஒற்றைக் கட்சியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

அதேவேளை, 22ஆவது திருத்தமானது சர்வாதிகாரக் கட்டுப்பாட்டை நிறுவுவதற்காகக் கொண்டுவரப்படவில்லை என அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. நீதிமன்ற அமைப்பில் நிலவும் தாமதங்களுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட பரந்த நீதித்துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியே இம்மாற்றங்கள் என அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் வாதிட்டுள்ளனர்.

ஆட்சியானது "மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சியாக" இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்மொழியப்பட்ட இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சிவராசா அனோஜன் விடுதலை: ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளருடன் சாணக்கியன் சந்திப்பு!

...

arvoshan.com

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

...

arvoshan.com

ஷிரான் பாசிக்கின் தந்தை அக்டோபர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

...

arvoshan.com

இரத்மலானை மற்றும் கல்கிசையில் கருபவளங்களுடன் இருவர் கைது

...

arvoshan.com

அனோஜன் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் மக்கள் பேரணி!

...

arvoshan.com

22 ஆம் திருத்தம்: தவறான செய்தி வெளியீடு; ஊடகங்கள் திருத்தம் செய்ய வேண்டும் - பிமல் ரத்நாயக்க

...

arvoshan.com

நீதிமன்ற அலுவலருக்கு லஞ்சம் வழங்க முயற்சி: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி விளக்கமறியலில்!

...

arvoshan.com

காலி, கண்டி, நுவரெலியாவில் நிலச்சரிவு அபாயம்: ‘சிவப்பு எச்சரிக்கை’ வெளியீடு!

...

arvoshan.com

எல்ல உணவகத்திற்கு ரூ. 10 இலட்சம் அபராதம்: அதிக விலைக்குக் குடிநீர் விற்பனை

...

arvoshan.com

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: FSP கடும் எதிர்ப்பு!

...

arvoshan.com

நாட்டின் 20 வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனம்: அரசாங்கம் நடவடிக்கை

...

arvoshan.com

அரசுக்கு 4.79 மில்லியன் நஷ்டம்: முன்னாள் பௌத்த சாசன அமைச்சுச் செயலாளர் கைது!

...

arvoshan.com

நவம்பர் 1 முதல் முக்கிய சேவைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

...

arvoshan.com

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

...