நவம்பர் 1 முதல் முக்கிய சேவைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

arvloshan.com

இலங்கையில் வங்கிச் கணக்குகள் திறத்தல், வாகனங்கள் மற்றும் காணிப் பதிவுகள், வணிகப் பதிவுகள் மற்றும் கடன் அட்டைகளை (Credit Card) பெறுதல் உள்ளிட்ட பல முக்கிய கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN - Taxpayer Identification Number) சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தலிலேயே திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் விதிகளுக்கு அமைவாகவும், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 102(3) ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்களுக்கும் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நவம்பர் 1 ஆம் திகதி முதல் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் தனிநபர்கள் செல்லுபடியாகும் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள முக்கிய சேவைகள்:

ஏதேனும் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கு தொடங்குதல்

கட்டிட வரைபடத்திற்கான அனுமதியைப் பெறுதல்

மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வாகன உரிமங்களை (Licence) புதுப்பித்தல்

காணிகள் அல்லது காணி உரிமங்களைப் பதிவு செய்தல்

வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளை கைமாற்றுதல் (இதன்போது பங்குகளை வாங்குபவர், விற்பவர் இருவருமே சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்)

கடன் அட்டைகளைப் பெறுதல்

குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல்களைச் செயலாக்குவதற்குப் பொறுப்பான அதிகாரிகள், தொடர்புடைய சேவைகளை நிறைவு செய்வதற்கு முன்னர், தனிநபர்கள் செல்லுபடியாகும் TIN சான்றிதழைச் சமர்ப்பித்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இதுவரையில் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறாதவர்கள், இச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் முன்கூட்டியே அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மின்னணு சேவை தளத்தின் ஊடாக TIN எண்ணுக்கு விண்ணப்பிக்க முடியும். பெறப்பட்ட சான்றிதழின் பிரதியை உரிய நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மின்-சேவை இணையத்தளம் மூலமாகத் தமது TIN எண்ணைச் சரிபார்க்க முடியும் என்றும், தேசிய அடையாள அட்டை (NIC) எண் மற்றும் TIN எண் தெளிவாகக் காட்டப்படும் சரிபார்ப்பு அச்சுப்பிரதியும் உத்தியோகபூர்வ சான்றிதழுக்கு மாற்றீடாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று 18 வயதை பூர்த்தியடைந்த அல்லது 2024 ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பிறகு 18 வயதை அடையும் நாட்டில் வசிக்கும் அனைத்து தனிநபர்களுக்கும் TIN எண்ணைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும் என்ற சட்டபூர்வ விதியை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சிவராசா அனோஜன் விடுதலை: ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளருடன் சாணக்கியன் சந்திப்பு!

...

arvoshan.com

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

...

arvoshan.com

ஷிரான் பாசிக்கின் தந்தை அக்டோபர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

...

arvoshan.com

இரத்மலானை மற்றும் கல்கிசையில் கருபவளங்களுடன் இருவர் கைது

...

arvoshan.com

அனோஜன் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் மக்கள் பேரணி!

...

arvoshan.com

22 ஆம் திருத்தம்: தவறான செய்தி வெளியீடு; ஊடகங்கள் திருத்தம் செய்ய வேண்டும் - பிமல் ரத்நாயக்க

...

arvoshan.com

நீதிமன்ற அலுவலருக்கு லஞ்சம் வழங்க முயற்சி: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி விளக்கமறியலில்!

...

arvoshan.com

காலி, கண்டி, நுவரெலியாவில் நிலச்சரிவு அபாயம்: ‘சிவப்பு எச்சரிக்கை’ வெளியீடு!

...

arvoshan.com

எல்ல உணவகத்திற்கு ரூ. 10 இலட்சம் அபராதம்: அதிக விலைக்குக் குடிநீர் விற்பனை

...

arvoshan.com

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: FSP கடும் எதிர்ப்பு!

...

arvoshan.com

நாட்டின் 20 வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனம்: அரசாங்கம் நடவடிக்கை

...

arvoshan.com

22ஆவது திருத்தம் 'அரசனின் புதிய ஆடைகள்' போன்றது: சஜித் சாடல்

...

arvoshan.com

அரசுக்கு 4.79 மில்லியன் நஷ்டம்: முன்னாள் பௌத்த சாசன அமைச்சுச் செயலாளர் கைது!

...

arvoshan.com

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

...