வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: வடக்கு, கிழக்கு மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் கலந்துரையாடல்

arvloshan.com

நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலை உயர்வால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குறித்த பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் இன்று (05) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையால் குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சஜித் பிரேமதாச கேட்டறிந்துள்ளார்.

குறிப்பாக, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மக்களின் கொள்வனவு சக்தி வீழ்ச்சியடைதல் மற்றும் உழைக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள், அத்தியாவசிய சுகாதார மற்றும் கல்விச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிரமங்கள், பாடசாலைக் கல்வியில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர்களின் போஷாக்கு நிலைமை தொடர்பான விடயங்களும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான தாஹிர் மரிக்கார், துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜி. ஸ்ரீனேசன், எம்.எஸ். உதுமா லெப்பை, காதர் மஸ்தான், பி. சத்தியலிங்கம் மற்றும் ஹபீப் றிபான் ஆகியோர் கலந்துகொண்டனர். 
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் 72 மணி நேர தடுப்புக் காவலை 48 மணி நேரமாகக் குறைக்க அரசு தயார் – ஜனாதிபதி

...

arvoshan.com

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 21 வயதுக்குட்பட்ட 11,970 பேர் கைது – ஜனாதிபதி

...

arvoshan.com

இறந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுத்த விவகாரம்: முன்னாள் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரி விளக்கமறியலில்!

...

arvoshan.com

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை மூன்று மாதங்களுக்கு முடக்க நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

உணவுப் பாதுகாப்பு முறைப்பாடுகளுக்கு QR குறியீட்டு முறை அறிமுகம் – கொழும்பு மாநகர சபை நடவடிக்கை

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியைக் கோரிய அறிவிப்பைத் திரும்பப் பெற்ற பொலிஸார்

...

arvoshan.com

ஏப்ரல் மாதம் முதல் காணாமல் போன 43 வயது நபர் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

...

arvoshan.com

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி – 12 பிடியாணைகளுடன் பெண் கைது!

...

arvoshan.com

இலங்கையில் TIN நடைமுறையில் முக்கிய மாற்றம் – 2027 ஏப்ரல் 1ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிப்பு!

...

arvoshan.com

சுற்றுலாப் பயணிகள் போல் வேடமிட்டு இரண்டு ஜேர்மனியர்களைக் கைது செய்த வனஜீவராசிகள் அதிகாரிகள்!

...

arvoshan.com

‘ஹஸ்தி சேனா’ நடவடிக்கை: கலாவெவ வடக்கில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் வனவிலங்குகளின் எச்சங்கள் மீட்பு!

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியைக் கோரிய அறிவிப்பைத் திரும்பப் பெற்றது பொலிஸார்

...

arvoshan.com

தெற்கு ஆழ்கடலில் மீன்பிடிப் படகிலிருந்து ரூ. 4.2 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

...

arvoshan.com

ஜஸ்மின், ஒட்டும் தன்மை கொண்ட அரிசி வகைகளுக்கு மாத்திரமே கிலோவுக்கு 280 ரூபாய் இறக்குமதி வரி – அமைச்சர் விளக்கம்!

...

arvoshan.com

ஆறு மாதங்களில் இலங்கையிலிருந்து பதிவேற்றப்பட்ட 8.7 இலட்சத்துக்கும் அதிகமான TikTok காணொளிகள் நீக்கம்!

...