வரவு-செலவுத் திட்டம் 2027: பெறுமதி சேர் வரியில் (VAT) முக்கிய மாற்றங்கள் – முழு விபரம்

arvloshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், பாடநூல்கள் உள்ளிட்ட பல்வேறு அச்சிடப்பட்ட கல்வி வெளியீடுகளுக்கு பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்களிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

கல்வி தொடர்பான அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து, மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கல்வி வளங்களை இலகுவாகக் கிடைக்கச் செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட உரையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.

இதன்படி, பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், பாடநூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சிறுவர்களுக்கான ஓவிய மற்றும் வண்ணம் தீட்டும் புத்தகங்கள், கல்வி வெளியீடுகள் உள்ளிட்ட அச்சிடப்பட்ட நூல்களுக்கு VAT வரியிலிருந்து விலக்களிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஏனைய அச்சுப் பொருட்களுக்கு 2024 ஜனவரி முதல் VAT அறவிடப்பட்டு வந்த நிலையில், பயிற்சிப் புத்தகங்களுக்கு அதற்கு முன்னரே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.

கல்வி, அறிவு மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், அத்தியாவசிய கல்விப் பொருட்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்பதே இந்தத் தீர்மானத்தின் நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சினிமா நுழைவுச்சீட்டுகளுக்கான VAT கணக்கீட்டில் மாற்றம்

இதற்கிடையில், சினிமா நுழைவுச்சீட்டுகளுக்கான VAT கணக்கிடும் முறையிலும் மாற்றங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

புதிய முறையின்படி, நுழைவுச்சீட்டின் முழுமையான பெறுமதிக்கும் வரி அறவிடுவதற்குப் பதிலாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் தங்களுக்குக் கிடைக்கும் வருமானப் பங்கின் அடிப்படையில் VAT செலுத்த வேண்டும்.

மேலும் சில VAT விலக்களிப்புகள் நீக்கம்

இதேவேளை, Artemia முட்டைகள் மற்றும் தேங்காய் நார்க் கழிவுப் பொருளான Coir Pith ஆகியவற்றுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள VAT விலக்களிப்புகளை நீக்கவும் வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், புதிதாகப் பதிவு செய்யப்படும் ஏற்றுமதியாளர்களுக்கான VAT நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வெளிநாட்டு நாணயங்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான VAT கணக்கீட்டின்போது இலங்கை மத்திய வங்கியின் குறிப்பு மாற்று விகிதத்தைப் பயன்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த VAT திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் அரசாங்கத்தின் வரி வருமானத்தில் 2.975 பில்லியன் ரூபாய் குறைவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகளை 2027 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு வரி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இவையும் உள்ளடங்குகின்றன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

2027 ஹஜ் பயணம்: இலங்கைக்கு 3,500 இடங்கள் ஒதுக்கீடு

...

arvoshan.com

இலங்கையர்களின் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு இலவச இரட்டைக் குடியுரிமை – 2027 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவு

...

arvoshan.com

வரவு செலவுத் திட்டம் 2027: அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பல்வேறு கொடுப்பனவுகளும் அதிகரிப்பு

...

arvoshan.com

வரவு செலவுத் திட்டம் 2027: அரச சேவையில் மேலும் 1,10,000 பேரை நியமிக்க அரசாங்கம் திட்டம்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: தனிநபர் வருமான வரியில் மேலும் சலுகைகள்

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டம்: PAYE வருமான வரி விலக்கு வரம்பு ரூ.162,500 ஆக அதிகரிப்பு – மேலும் வரிக் குறைப்புகளுக்கு முன்மொழிவு

...

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.117.3 பில்லியன் ஒதுக்கீடு

...

arvoshan.com

ருவன்வெலிசாய பகுதியில் ஏற்பட்ட மோதல் – நான்கு பிக்குகள் உட்பட 8 பேர் பொலிஸ் காவலில்

...

arvoshan.com

கம்பி வலையில் சிக்கிய பெண் சிறுத்தை - பல மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க மருந்து கொடுத்து மீட்பு

...

arvoshan.com

இலங்கையில் 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு; குழாய்க் கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோகத்தில் புதிய திட்டங்கள்!

...

arvoshan.com

வீடுகளின் சூரிய மின்சக்தி மின்கல சேமிப்பு கட்டமைப்புக்கு ஒரு kWh-க்கு ரூ.25,000 மானியம்!

...

arvoshan.com

எமிரேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 528 பில்லியன் ரூபா நட்டம் – ஜனாதிபதி

...

arvoshan.com

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் பொலிஸ் காவலில்!

...

arvoshan.com

மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் – விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி மனு தாக்கல்!

...

arvoshan.com

“நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டோம்” – ஜனாதிபதிக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி

...