வரவு செலவுத் திட்டம் 2027: அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பல்வேறு கொடுப்பனவுகளும் அதிகரிப்பு

arvloshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பல்வேறு கொடுப்பனவுகளின் அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக நிவாரணம் உள்ளிட்ட பல சலுகைகளை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

இதற்கமைய, 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் இறுதிக்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு அரச துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, மருத்துவர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவு 70,000 ரூபாயிலிருந்து 95,000 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

தாதியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கான விசேட கடமைக்கான கொடுப்பனவு 6,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக இரட்டிப்பாக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக கல்விசார் பணியாளர்களுக்கான மாதாந்த கல்விசார் கொடுப்பனவு 25,000 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடச் செலவுகளுக்காக மாதாந்தம் மேலதிகமாக 10,000 ரூபாய் வழங்கவும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான இடர் கொடுப்பனவை 8,000 ரூபாயிலிருந்து 16,000 ரூபாயாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவு 1,600 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது.

தகுதியுடைய நிறைவேற்று அதிகாரிகளுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவு 50,000 ரூபாயிலிருந்து 100,000 ரூபாயாக இரட்டிப்பாக்கப்படவுள்ளதுடன், முப்படையினருக்கான நாளாந்த உணவுக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

அதேவேளை, 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் மேலதிகமாக 2,500 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்கவும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

இந்தக் கொடுப்பனவு அதிகரிப்புகளில் பெரும்பாலானவை 2027ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. சில கொடுப்பனவு அதிகரிப்புகள் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளதுடன், எஞ்சிய தொகை 2028ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

2027 ஹஜ் பயணம்: இலங்கைக்கு 3,500 இடங்கள் ஒதுக்கீடு

...

arvoshan.com

இலங்கையர்களின் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு இலவச இரட்டைக் குடியுரிமை – 2027 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவு

...

arvoshan.com

வரவு செலவுத் திட்டம் 2027: அரச சேவையில் மேலும் 1,10,000 பேரை நியமிக்க அரசாங்கம் திட்டம்

...

arvoshan.com

வரவு-செலவுத் திட்டம் 2027: பெறுமதி சேர் வரியில் (VAT) முக்கிய மாற்றங்கள் – முழு விபரம்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: தனிநபர் வருமான வரியில் மேலும் சலுகைகள்

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டம்: PAYE வருமான வரி விலக்கு வரம்பு ரூ.162,500 ஆக அதிகரிப்பு – மேலும் வரிக் குறைப்புகளுக்கு முன்மொழிவு

...

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.117.3 பில்லியன் ஒதுக்கீடு

...

arvoshan.com

ருவன்வெலிசாய பகுதியில் ஏற்பட்ட மோதல் – நான்கு பிக்குகள் உட்பட 8 பேர் பொலிஸ் காவலில்

...

arvoshan.com

கம்பி வலையில் சிக்கிய பெண் சிறுத்தை - பல மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க மருந்து கொடுத்து மீட்பு

...

arvoshan.com

இலங்கையில் 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு; குழாய்க் கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோகத்தில் புதிய திட்டங்கள்!

...

arvoshan.com

வீடுகளின் சூரிய மின்சக்தி மின்கல சேமிப்பு கட்டமைப்புக்கு ஒரு kWh-க்கு ரூ.25,000 மானியம்!

...

arvoshan.com

எமிரேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 528 பில்லியன் ரூபா நட்டம் – ஜனாதிபதி

...

arvoshan.com

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் பொலிஸ் காவலில்!

...

arvoshan.com

மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் – விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி மனு தாக்கல்!

...

arvoshan.com

“நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டோம்” – ஜனாதிபதிக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி

...