வரவு-செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் மனோ கணேசன் எழுத்துமூல கோரிக்கை

arvloshan.com

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தமிழ் மக்களின் முக்கிய தேவைகள் மற்றும் கோரிக்கைகளை உள்ளடக்குமாறு ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு-செலவுத் திட்டம் என்பது வெறுமனே அரசாங்கத்தின் வரவு-செலவுக் கணக்கறிக்கை மாத்திரமல்ல. அது அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையாகும் எனச் சுட்டிக்காட்டிய மனோ கணேசன், மலையகப் பெருந்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சம்பள உயர்வுக்கான தெளிவான நடைமுறை அவசியம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில், எத்தனை கிலோகிராம் தேயிலைக் கொழுந்து பறித்தால் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்ற தெளிவான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அறிவிக்கப்படும்போதே சம்பள நடைமுறையைச் சட்டப்பூர்வமாக்கி, அதனைச் சுற்றறிக்கை மூலம் அமுல்படுத்துவதுடன், பெருந்தோட்ட நிறுவனங்களும் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும்

பெருந்தோட்ட மக்களுக்கு வதிவிடக் காணிகளை வழங்குவதுடன், அட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமையத் தரிசு காணிகளைப் பிரித்து மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தோட்டக் காணிகளை மீண்டும் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தவிர்த்து, மக்களுக்குச் சொந்தமான காணி உரிமையை வழங்கி, அவர்கள் தனி வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கு அனுமதிப்பதே சரியான தீர்வாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடமைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கேள்வி

அரசாங்கத்தின் எஞ்சியுள்ள மூன்று ஆண்டுகால ஆட்சியில் பெருந்தோட்டப் பகுதிகளில் எத்தனை வீடுகள் அமைக்கப்படவுள்ளன என்பதையும், அதற்காக ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சமந்த வித்யா ரத்ன, 2025ஆம் ஆண்டுக்குள் 6,000 வீடுகள் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்ட மனோ கணேசன், நடைமுறையில் 50 வீடுகள் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பெருந்தோட்டப் பகுதிகளில் தொடர்மாடிக் குடியிருப்புகளுக்குப் பதிலாகத் தனி வீடுகளே அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், பெருந்தோட்டப் பகுதிகளில் தொடர்மாடிக் கட்டடங்கள் அமைக்கப்படமாட்டாது என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அத்துடன், பெருந்தோட்ட மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அட்டன் நகர அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே?

அட்டன் பிரகடனத்தில் அட்டன் நகர அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அந்த அறிவிப்பை நம்பி மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த திட்டத்திற்காக இதுவரை ஒரு சதம் கூட செலவிடப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனவே, வெறுமனே வாக்குறுதிகளை வழங்கிக் காலத்தைக் கடத்தாமல், மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும் என்றும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

டெலிகிராம் ஊடாக ரூ. 12.6 மில்லியன் இணைய மோசடி – சந்தேகநபர் கைது

...

arvoshan.com

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: அரசின் அதிகாரங்கள் அதிகரிக்கும் என BASL எச்சரிக்கை

...

arvoshan.com

சட்டவிரோத இரண்டாவது திருமணமும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாகக் கருதப்படலாம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

...

arvoshan.com

கோதுமை மாவின் விலை ரூ.13 அதிகரிப்பு: அனுமதி வழங்கியது யார்? நுகர்வோர் அதிகார சபை கேள்வி

...

arvoshan.com

பௌத்த மதத் தலங்களுக்கு தாக்குதல் மிரட்டல் விடுத்த 21 வயது இளைஞர் கைது

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவை மீறியதாக ஐஜிபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை!

...

arvoshan.com

ரூ.20,000 இலஞ்சம் பெற்ற போக்குவரத்து பரிசோதகருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

...

arvoshan.com

இலங்கையின் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த நோர்டிக் நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

...

arvoshan.com

“ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகரே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஆலோசனை வழங்குகிறாரா?” – ஹர்ஷ கேள்வி

...

arvoshan.com

இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவானது! பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை பெய்யும் அபாயம்

...

arvoshan.com

அரச பொறியியலாளர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் – அமைச்சர் லால் காந்த

...

arvoshan.com

2025/26 நிதியாண்டில் இலங்கையின் முன்னணி 100 நிறுவனங்களின் வருவாய் 20% அதிகரிப்பு

...

arvoshan.com

சைபர் தாக்குதல் குற்றச்சாட்டு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திட்டவட்ட மறுப்பு!

...

arvoshan.com

அடுத்த வாரம் முதல் ‘கிராமத்திலிருந்து கிராமத்திற்கு’ பிரசாரத்தை ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – நாமல்

...

arvoshan.com

ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சூனியச் சடங்குகள்: பிரதி அமைச்சர் ஆதரவு

...