கோதுமை மாவின் விலை ரூ.13 அதிகரிப்பு: அனுமதி வழங்கியது யார்? நுகர்வோர் அதிகார சபை கேள்வி

arvloshan.com

கோதுமை மாவின் விலை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ரூ.13 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பான தகவல் ஊடகச் செய்திகள் மூலமாகவே தமக்குக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.

விலை அதிகரிப்பு குறித்து கோதுமை மாவு உற்பத்தியாளர்களிடமிருந்து எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, விலை அதிகரிப்புக்கான காரணம் மற்றும் விலைத் திருத்தம் தொடர்பான விபரங்களைத் தெரிவிக்குமாறு உற்பத்தியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ், கோதுமை மா கட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசியப் பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அதன் விலையை அதிகரிப்பதற்கு முன்னர் உற்பத்தியாளர்கள் அதிகார சபையுடன் கலந்தாலோசித்து இணக்கப்பாட்டுக்கு வருவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்ட விதிமுறைகளை மீறி அதிகரிக்கப்பட்ட விலையில் கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைக்கும் பதில்களை ஆராய்ந்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

வரவு-செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் மனோ கணேசன் எழுத்துமூல கோரிக்கை

...

arvoshan.com

டெலிகிராம் ஊடாக ரூ. 12.6 மில்லியன் இணைய மோசடி – சந்தேகநபர் கைது

...

arvoshan.com

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: அரசின் அதிகாரங்கள் அதிகரிக்கும் என BASL எச்சரிக்கை

...

arvoshan.com

சட்டவிரோத இரண்டாவது திருமணமும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாகக் கருதப்படலாம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

...

arvoshan.com

பௌத்த மதத் தலங்களுக்கு தாக்குதல் மிரட்டல் விடுத்த 21 வயது இளைஞர் கைது

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவை மீறியதாக ஐஜிபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை!

...

arvoshan.com

ரூ.20,000 இலஞ்சம் பெற்ற போக்குவரத்து பரிசோதகருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

...

arvoshan.com

இலங்கையின் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த நோர்டிக் நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

...

arvoshan.com

“ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகரே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஆலோசனை வழங்குகிறாரா?” – ஹர்ஷ கேள்வி

...

arvoshan.com

இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவானது! பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை பெய்யும் அபாயம்

...

arvoshan.com

அரச பொறியியலாளர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் – அமைச்சர் லால் காந்த

...

arvoshan.com

2025/26 நிதியாண்டில் இலங்கையின் முன்னணி 100 நிறுவனங்களின் வருவாய் 20% அதிகரிப்பு

...

arvoshan.com

சைபர் தாக்குதல் குற்றச்சாட்டு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திட்டவட்ட மறுப்பு!

...

arvoshan.com

அடுத்த வாரம் முதல் ‘கிராமத்திலிருந்து கிராமத்திற்கு’ பிரசாரத்தை ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – நாமல்

...

arvoshan.com

ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சூனியச் சடங்குகள்: பிரதி அமைச்சர் ஆதரவு

...