வனங்குளம் பகுதியில் சட்டவிரோத வெடிப் பொறிகளை வைத்திருந்த நபருக்கு 80,000 ரூபாய் தண்டப்பணம்!
அனுராதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட வனங்குளம் பகுதியில், அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் நான்கு வெடிப் பொறிகளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு, ககதக்கஸ்டிகிலிய நீதவான் நீதிமன்றம் 80,000 ரூபாய் தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. குறித்த தீர்ப்பு அக்டோபர் 9 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மொரகொட அலுவலக அதிகாரிகளால் வனங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, சந்தேக நபர் கடந்த அக்டோபர் 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விசாரணைகள் நிறைவுபெற்றதன் பின்னர் சந்தேக நபரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி ககதக்கஸ்டிகிலிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதவான், கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு சட்டவிரோத வெடிப் பொறிக்கும் தலா 20,000 ரூபாய் வீதம், நான்கு வெடிப் பொறிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 80,000 ரூபாய் தண்டப்பணத்தைச் செலுத்துமாறு சந்தேக நபருக்கு உத்தரவிட்டுள்ளார்.