மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் – விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி மனு தாக்கல்!

arvloshan.com

2012ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட விசேட மனு மீதான விசாரணை, நேற்று (11) மாத்தளை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் (Families of the Disappeared – FOD) அமைப்பு சார்பில் சட்டத்தரணிகளான ஹிமாலி குலரத்ன மற்றும் லக்மால் சூரியகொட ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக முன்னதாக மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக FOD அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

1980களின் இறுதிப் பகுதியில் தெற்கில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கிளர்ச்சிக் காலத்தில் தமது குடும்ப உறுப்பினர்களைக் காணாமல் இழந்த 15 தாய்மார்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள், 2015ஆம் ஆண்டு மாத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

மனித எச்சங்களின் காலத்தை நிர்ணயிப்பதற்காக அமெரிக்காவின் Beta Analytic நிறுவனம் மேற்கொண்ட காபன் காலக் கணிப்பு பரிசோதனையில், அவை 1950ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாடுகளே வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்படுவதற்குக் காரணமாக அமைந்தன.

எனினும், தடயவியல் தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் அஜித் ஜயசேன ஆகியோர் குறித்த காபன் காலக் கணிப்பு முடிவுகளை மறுத்திருந்தனர்.

மனித எச்சங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாசுபாடுகள் காரணமாகவே காபன் காலக் கணிப்பு அறிக்கைக்கும் தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

2012ஆம் ஆண்டு மாத்தளை பொது வைத்தியசாலையில் உயிர்வாயு உற்பத்தி நிலையம் அமைப்பதற்காகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது, கட்டுமானப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் 155 மனித உடல்கள் அங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டன.

தடயவியல் தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த அறிக்கையில், குறித்த மனித எச்சங்களில் துப்பாக்கிகள் மற்றும் மழுங்கிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், சில மண்டையோடுகளில் இரும்பு ஆணிகள் அடிக்கப்பட்டிருந்ததுடன், தலை துண்டிக்கப்பட்டதற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டிருந்தன.

அகழ்வுப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட சில தொல்பொருட்களின் அடிப்படையில், இந்த மனித எச்சங்கள் 1980களின் இறுதிப் பகுதியைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என ராஜ் சோமதேவ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி மாத்தளை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சட்டத்தரணிகள் ஹிமாலி குலரத்ன மற்றும் லக்மால் சூரியகொட ஆகியோர் எதிர்பார்த்துள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

இலங்கையில் 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு; குழாய்க் கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோகத்தில் புதிய திட்டங்கள்!

...

arvoshan.com

வீடுகளின் சூரிய மின்சக்தி மின்கல சேமிப்பு கட்டமைப்புக்கு ஒரு kWh-க்கு ரூ.25,000 மானியம்!

...

arvoshan.com

எமிரேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 528 பில்லியன் ரூபா நட்டம் – ஜனாதிபதி

...

arvoshan.com

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் பொலிஸ் காவலில்!

...

arvoshan.com

“நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டோம்” – ஜனாதிபதிக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி

...

arvoshan.com

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு 5,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலங்களில் பழச் செய்கை – அரசாங்கம் புதிய திட்டம்

...

arvoshan.com

அநுராதபுரத்தில் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் இடத்தில் மோதல்!

...

arvoshan.com

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு பொலிஸார் அழைப்பாணை

...

arvoshan.com

இலங்கையில் அதிக வரி விதிப்புகள் தொடர வேண்டியதன் அவசியம் என்ன? – பொருளாதார நிபுணர் விளக்கம்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தயாராகும் எதிர்க்கட்சி – விசேட கலந்துரையாடல்

...

arvoshan.com

அரிசி நுகர்வை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும் – அரச ஊழியர்களுக்கு லால் காந்த அறிவுரை

...

arvoshan.com

பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தோல்வி – அரச நிறுவனங்கள் பல பில்லியன் ரூபா நட்டத்தில்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

ஹோட்டல்களுக்கு சட்டவிரோதமாக வன இறைச்சி விநியோகம்; ஐந்து துப்பாக்கிகள், 100-க்கும் மேற்பட்ட பொறிகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

நெதர்லாந்து வேலைவாய்ப்பு விசா தொடர்பில் மோசடி – பொதுமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

...