போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 21 வயதுக்குட்பட்ட 11,970 பேர் கைது – ஜனாதிபதி

arvloshan.com

இலங்கையில் 2025–2026ஆம் ஆண்டு காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 21 வயதுக்குட்பட்ட 11,970 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டமான “நாடு ஒன்றிணைந்து” (Ratama Ekata) முன்னெடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று (05) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இதன்போது, கைது செய்யப்பட்டவர்களில் 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 10,889 பேரும், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,068 பேரும், 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 13 சிறுவர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 50 பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மொத்தமாக 11,737 ஆண்களும் 233 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

குறிப்பாக, கடந்த ஓராண்டு காலப்பகுதியில் சுமார் 200 சிறுமிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் நாட்டின் இளைய தலைமுறையினரைச் சீரழிப்பதுடன், அவர்களின் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்துவதாக அவர் எச்சரித்தார்.

“இந்த நிலைமை தொடர்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதனை நாம் தோற்கடிப்போம்” என ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 15,285 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவற்றில் 6,526 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 4,009 கிலோகிராம் ஹெரோயினும், 2,595 கிலோகிராம் ஏனைய போதைப்பொருட்களும், 1,841 கிலோகிராம் குஷ் மற்றும் ஹஷிஷ் வகை போதைப்பொருட்களும், 314 கிலோகிராம் கொக்கேய்னும் அடங்குவதாக அவர் வெளியிட்ட புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இளைய தலைமுறையினரைப் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கும், போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதற்கும் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் 72 மணி நேர தடுப்புக் காவலை 48 மணி நேரமாகக் குறைக்க அரசு தயார் – ஜனாதிபதி

...

arvoshan.com

இறந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுத்த விவகாரம்: முன்னாள் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரி விளக்கமறியலில்!

...

arvoshan.com

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை மூன்று மாதங்களுக்கு முடக்க நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

உணவுப் பாதுகாப்பு முறைப்பாடுகளுக்கு QR குறியீட்டு முறை அறிமுகம் – கொழும்பு மாநகர சபை நடவடிக்கை

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியைக் கோரிய அறிவிப்பைத் திரும்பப் பெற்ற பொலிஸார்

...

arvoshan.com

ஏப்ரல் மாதம் முதல் காணாமல் போன 43 வயது நபர் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

...

arvoshan.com

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி – 12 பிடியாணைகளுடன் பெண் கைது!

...

arvoshan.com

இலங்கையில் TIN நடைமுறையில் முக்கிய மாற்றம் – 2027 ஏப்ரல் 1ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிப்பு!

...

arvoshan.com

சுற்றுலாப் பயணிகள் போல் வேடமிட்டு இரண்டு ஜேர்மனியர்களைக் கைது செய்த வனஜீவராசிகள் அதிகாரிகள்!

...

arvoshan.com

‘ஹஸ்தி சேனா’ நடவடிக்கை: கலாவெவ வடக்கில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் வனவிலங்குகளின் எச்சங்கள் மீட்பு!

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியைக் கோரிய அறிவிப்பைத் திரும்பப் பெற்றது பொலிஸார்

...

arvoshan.com

தெற்கு ஆழ்கடலில் மீன்பிடிப் படகிலிருந்து ரூ. 4.2 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

...

arvoshan.com

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: வடக்கு, கிழக்கு மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் கலந்துரையாடல்

...

arvoshan.com

ஜஸ்மின், ஒட்டும் தன்மை கொண்ட அரிசி வகைகளுக்கு மாத்திரமே கிலோவுக்கு 280 ரூபாய் இறக்குமதி வரி – அமைச்சர் விளக்கம்!

...

arvoshan.com

ஆறு மாதங்களில் இலங்கையிலிருந்து பதிவேற்றப்பட்ட 8.7 இலட்சத்துக்கும் அதிகமான TikTok காணொளிகள் நீக்கம்!

...