பேராதனை கருப்பு பாலத்திற்கு இணையாக புதிய புகையிரதப் பாலம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க

arvloshan.com

பேராதனை 'களு பாலம்' (கருப்புப் பாலம்) எனப்படும் புகையிரதப் பாலத்திற்குப் சமாந்தரமாக, புதிய புகையிரதப் பாலமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இப்புதிய பாலத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களும் கட்டமைப்பு வடிவமைப்பு பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டையிலிருந்து விசேட புகையிரதத்தில் இன்று (02) பேராதனை புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சர், அங்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக, மலைநாட்டுப் புகையிரதப் பாதையின் ரம்புக்கனை முதல் பேராதனை வரையிலான புகையிரதப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. சுமார் பத்து மாதகால இடைவெளிக்குப் பின்னர், குறித்த பாதை போக்குவரத்துக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதன் ஆரம்பக் கட்ட பயணத்தைக் குறிக்கும் வகையில், கொழும்பு கோட்டையிலிருந்து விசேட புகையிரதம் மூலம் வருகை தந்த அமைச்சர், பேராதனை புகையிரத நிலையத்தை வந்தடைந்து நிலைமைகளை ஆராய்ந்தார்.

தற்போதுள்ள பேராதனை கருப்புப் பாலத்தின் பராமரிப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பல்வேறு காரணங்களால் இப்பணிகள் தாமதமடைந்த போதிலும், அவற்றை விரைவாக நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், புகையிரதத் திணைக்களத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், புகையிரதச் சேவைகளை விருத்தி செய்யவும், ஊழியர்களுக்கான அத்தியாவசிய வசதிகளை வழங்கவும் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் சிலரால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் காரணமாகப் புகையிரத ஊழியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், விமர்சிப்பவர்கள் எதிர்பார்ப்பது போலப் புகையிரதப் பாதைகளின் நிர்மாணப் பணிகளை மிக விரைவாகச் செய்து முடித்துவிட முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

காந்தி ஜெயந்தி: அலரிமாளிகையில் மகாத்மா காந்தி உருவச்சிலைக்குப் பிரதமர் ஹரிணி மலரஞ்சலி!

...

arvoshan.com

எரிபொருள் விலை சூத்திரத்தை பகிரங்கப்படுத்துமாறு சம்பிக்க கோரிக்கை

...

arvoshan.com

சுறா இறக்கைகளுடன் 5 மீனவர்கள் கைது

...

arvoshan.com

தனியார் விநியோகஸ்தர்களால் சி.பி.சி.யின் (CPC) விலை நெகிழ்வுத்தன்மை பாதிப்பு: ஜனாதிபதி அனுரகுமார சாடல்

...

arvoshan.com

போதைப்பொருள் வழக்குகள்: 8-14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 9,000 பேருக்கு மேல் கைது!

...

arvoshan.com

அரசாங்கக் கூற்றுகளைத் திரிப்பதாக இரு தனியார் ஊடகங்கள் மீது அமைச்சர் லால் காந்த சாடல்

...

arvoshan.com

மின் கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்!

...

arvoshan.com

11 மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை மட்டம்' கொண்ட வெப்ப வானிலை எச்சரிக்கை!

...

arvoshan.com

மெட்ரோ பேருந்துகள் முன்பதிவு: தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை!

...

arvoshan.com

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இலங்கையருக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் 8 மாத சிறைத்தண்டனை!

...

arvoshan.com

'டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவம்': மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

...

arvoshan.com

செப்டம்பருக்குள் 2.04 டிரில்லியன் ரூபாய் வரி வருமானம்: ஆண்டின் இலக்கில் 85% ஐ அடைந்தது இலங்கை

...

arvoshan.com

இலங்கையில் 10 நவீன நஞ்சற்ற பழ பழுக்க வைக்கும் அறைகள் உருவாக்கம்

...

arvoshan.com

முன்னாள் எம்.பி. மனைவியின் லஞ்ச விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் கைது!

...

arvoshan.com

சுரேஷ் சலே வழக்கு: 10 மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

...