நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி திட்டம் முடங்கும் அபாயம்: புதிய சட்டத் திருத்தத்திற்கு GMOA எதிர்ப்பு

arvloshan.com

நாய்களுக்கான தடுப்பூசி ஏற்றும் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை இலங்கையின் வெறிநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்ட மூலத்தின் விதியொன்றின்படி, கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மட்டுமே நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் கடமையாற்றும் கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் பின்னணியில், இத்தகைய நிபந்தனையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்றும், இது சுகாதார அமைச்சின் மூலம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்தை முடக்கும் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது பயிற்சி பெற்ற தடுப்பூசி செலுத்துனர்கள் மூலமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் 362 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளின் கீழ், சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் இப் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் நாய்களுக்கான தடுப்பூசி வழங்கள் தற்போது சுமார் 60 சதவீதமாக உள்ள நிலையில், இலக்கு வைக்கப்பட்ட அளவு 70 சதவீதமாகும்.

இதற்கு முன்னர், 2017 ஆம் ஆண்டில் இத் தடுப்பூசி திட்டம் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நினைவுகூர்ந்துள்ளது. அப்போது, 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த தடுப்பூசி வழங்கல் வீதம், ஒரே ஆண்டிற்குள் 6 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னரே இத்திட்டம் மீண்டும் சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

1970களில் இலங்கையில் ஆண்டிற்கு சுமார் 350 ஆக இருந்த வெறிநோய் மரணங்கள், கடந்த ஆண்டில் 14 ஆகக் குறைந்துள்ளதாகவும், நாட்டின் வெறிநோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவிக்கிறது. நடப்பு 2026 ஆம் ஆண்டில் இதுவரை 7 வெறிநோய் மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.

மேலும், உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் உலக விலங்கு சுகாதார அமைப்பு (WOAH) ஆகியவற்றின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட ஆய்விலும், நாய்களுக்கான தடுப்பூசி திட்டத்தை சுகாதார அமைச்சின் கீழேயே தொடர்ந்து நடத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேசிய தடுப்பூசி திட்டத்திற்குப் பாதகம் ஏற்படாத வகையில், கால்நடை மருத்துவரின் நேரடி மேற்பார்வை தொடர்பான முன்மொழியப்பட்ட விதியில் உடனடியாகத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், வெறிநோய் பிடித்ததாகச் சந்தேகிக்கப்படும் அல்லது வன்முறையாக நடந்துகொள்ளும் நாய்கள் தொடர்பான சட்ட விதிகளிளும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. புதிய சட்டப் முன்வரைவின் மூலம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விலங்குகளைப் பிடிப்பதற்குப் பொலிஸாருக்கு இருக்கும் அதிகாரம் நீக்கப்படும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, இச்சட்ட மூலத்தை மேற்கொண்டு கொண்டு செல்வதற்கு முன்னர், அது தொடர்பான விவாதங்களை நடத்தி, உரிய பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

53 இராணுவ வாகனங்கள் முழு சீரமைப்பு: தளபதி தலைமையில் ஒப்படைப்பு!

...

arvoshan.com

துறைமுக நகர விசா கண்காணிப்பில் குளறுபடி: பொது நிதிக் குழுவில் காரசார விவாதம்!

...

arvoshan.com

வடமேல் மாகாணத்தில் வனவிலங்கு சோதனையில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் மூவர் கைது; ஒருவர் தப்பியோட்டம்

...

arvoshan.com

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

...

arvoshan.com

ஞானசார தேரரின் காவி ஆடை கழற்றப்பட்ட விவகாரம்: கம்மன்பிலவின் குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸ் விசாரணை!

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ச மீதான நிதி மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

...

arvoshan.com

கொழும்பு போதைப்பொருள் பிடிப்பு: நான்கு ஜமேக்கா நாட்டவர்கள் அக்டோபர் 19 வரை தடுத்து வைப்பு

...

arvoshan.com

ஞானசார தேரர் எனது நண்பர், ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம்: அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்

...

arvoshan.com

275 மில்லியன் இழப்பீடு செலுத்தாத கெஹெலியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

...

arvoshan.com

ஜனாதிபதி குறிப்புடன் சமூக ஊடகப் பதிவு: 21 வயது மாணவர் மீது பொலிஸ் விசாரணை

...

arvoshan.com

போதைப்பொருள் வர்த்தகப் பணம்: 22 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் முடக்கம்

...

arvoshan.com

களனி ஆற்றுப் படுகை நீரேற்று நிலையத்தை நவீனமயப்படுத்த ஜப்பான் 4.56 பில்லியன் ரூபா நன்கொடை!

...

arvoshan.com

கிராண்பாஸ் மகாவத்தையில் பயங்கர தீ விபத்து: 25 வீடுகள் எரிந்து நாசம்!

...

arvoshan.com

சிறைப்படுத்தப்படும் பிக்குகளின் காவி உடை தொடர்பான தீர்மானம் நிக்காயக்களுக்கே உரியது: அமைச்சர் அறிவிப்பு

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்‌ஷவின் மருத்துவ நிலை குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தல்

...