தென்கொரியா சதித்திட்டம் தீட்டுகின்றது: கண்ணிவெடித் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்தார் கிம் யோ ஜொங்

arvloshan.com

தென்கொரிய சிப்பாய்கள் மூவர் படுகாயமடைந்த கண்ணிவெடி வெடிப்புச் சம்பவத்திற்கு வடகொரியாவே காரணம் என சியோல் சுமத்திய குற்றச்சாட்டுகளை வடகொரியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளதுடன், இது தென்கொரியாவின் சதித்திட்டம் என்றும் சாடியுள்ளது.

கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள படைவிலக்கப்பட்ட மண்டலத்தில் இடம்பெற்ற இரு வேறு வெடிப்புச் சம்பவங்களில் தென்கொரிய இராணுவச் சிப்பாய்கள் மூவர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகள் கட்டளைப் பீடத்துடன் இணைந்து நடத்திய கள ஆய்வுகளின் அடிப்படையில், வடகொரியாவினால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளே இவ்வெடிப்புக்குக் காரணம் என தென்கொரிய இராணுவம் அறிவித்தது.

அத்துடன், அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் ஆய்வுகளின் போது மேலும் ஒரு வடகொரியக் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டதாகவும், இது 1950-53 கொரியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வடகொரியா மீறிய செயலாகும் என்றும் ஐக்கிய நாடுகள் கட்டளைப் பீடம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடகொரியாவின் காட்டமான பதில்

இந்நிலையில், தென்கொரியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் (Kim Jong Un) சகோதரியும், நாட்டின் செல்வாக்குமிக்க அதிகாரியுமான கிம் யோ ஜொங் (Kim Yo Jong) கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தென்கொரியாவின் இந்தக் கூற்றை ஒரு "நாடகம்" எனக் குறிப்பிட்ட அவர், வடகொரியாவிற்கு எதிராக அத்துமீறல்களை மேற்கொள்வதற்காகவே சியோல் நிர்வாகம் இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் புனைந்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வடகொரியச் சிப்பாய்கள் ஒருபோதும் எல்லையைக் கடக்கவில்லை எனத் தெரிவித்த அவர், எல்லையை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள தமது படைகள் மீது தென்கொரிய இராணுவம் தாக்குதல் நடாத்தினால், கடுமையான மற்றும் இரக்கமற்ற முறையில் பதிலடித் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

பதற்ற நிலை அதிகரிப்பு

இச்சம்பவம் குறித்துத் கருத்து தெரிவித்துள்ள தென்கொரிய கூட்டுப் படைப் பிரதானிகள் அலுவலகத்தின் மூத்த அதிகாரி, இச்சம்பவத்திற்கு வடகொரியா பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளார். மேலும், இறுதி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தகுந்த பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சரும் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தனது அணுஆயுதத் திட்டங்களை விரிவுபடுத்தி வருவதுடன், எல்லைப் பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும் டாங்க் எதிர்ப்புத் தடைகளை அதிகரித்து வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான அவசர இராஜதந்திர தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய இச்சம்பவம் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பெரும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

போப் லியோ XIV அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய்: வெற்றிகரமான அறுவை சிகிச்சை

...

arvoshan.com

சவூதியின் அரம்கோ எண்ணெய் வளாகம் மீது ஹவுதிகள் தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்!

...

arvoshan.com

பாகிஸ்தானில் ஆளுநர் ஆட்சி: அடிப்படை உரிமைகளைப் பறிக்கக் கூடாது என எச்சரிக்கை

...

arvoshan.com

நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம்

...

arvoshan.com

உலக அரங்கில் பெரும் திருப்பம்: ரஷ்யா - உக்ரைன் போரில் ‘எரிசக்தி போர்நிறுத்தம்’ அறிவித்தார் டொனால்டு ட்ரம்ப்!

...

arvoshan.com

சர்வதேச நீதிக்காக போராடிய நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

...

arvoshan.com

ரியாத் சர்வதேச விமான நிலையத் தாக்குதல்: சவூதியா விமான நிறுவனத்தின் விமானி பலி

...

arvoshan.com

முன்னாள் வெனிசுவேலா அதிபர் மதுரோ மீது சித்திரவதைச் சதி வழக்கு: நியூயோர்க்கில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல்

...

arvoshan.com

சவூதி விமான நிலையங்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 3 பேர் பலி; 36 பேர் படுகாயம்!

...

arvoshan.com

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பரபரப்பு: அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆடையில்லா தங்கச் சிலை திறப்பு!

...

arvoshan.com

ஓமன் அருகே கப்பல் மீது தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம்

...

arvoshan.com

உலகளவில் 8-இல் 1 புற்றுநோயாளிகளுக்குத் தொற்றுகளே காரணம்: தடுப்பூசிகளால் தவிர்க்க முடியும் என ஆய்வு!

...

arvoshan.com

ரஷ்யாவின் 51% எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை அழித்ததாக உக்ரைன் அதிரடி அறிவிப்பு!

...

arvoshan.com

பிரான்ஸில் மாணவர் போராட்டம்: எறிகுண்டு வெடித்து சிறுவன் கை இழப்பு!

...

arvoshan.com

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் தலைநகர் நோக்கி பேரணி

...