அமெரிக்காவில் $18 பில்லியன் பிரம்மாண்ட எஃகு ஆலை: எஸ்ஸார் குழுமம் முதலீடு – ட்ரம்ப் அறிவிப்பு

arvloshan.com

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய எஃகு (Steel) உற்பத்தி ஆலையை இந்தியாவின் முன்னணி தொழில்துறை நிறுவனமான எஸ்ஸார் குழுமம் அமைக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநிலத்தில் 15 பில்லியன் டொலர் செலவில் அமையவுள்ள இந்த எஃகு ஆலை உட்பட, அந்நாட்டில் மொத்தம் 18 பில்லியன் டொலர் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எஸ்ஸார் குழுமம் திட்டமிட்டுள்ளது. இது இந்திய நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றில், எஸ்ஸார் குழுமத்தின் உரிமையாளர்களான Ruia குடும்பத்தினரின் முன்னிலையில் அதிபர் ட்ரம்ப் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அமெரிக்காவில் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி

எஸ்ஸார் குழுமத்தின் அமெரிக்கத் துணை நிறுவனமான ‘மெசாபி மெட்டாலிக்ஸ்’ இந்த பிரம்மாண்ட திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதற்கான இரும்புத் தாது தாதுப் பொருட்கள், மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள அந்நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து பெறப்பட்டு, முழுமையான எஃகு உற்பத்தி அமெரிக்காவிலேயே நடைபெறும் வகையில் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட விநியோகச் சங்கிலி உருவாக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், "அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய எஃகு ஆலையை அயோவா மாநிலத்தில் மெசாபி மெட்டாலிக்ஸ் நிறுவனம் நிறுவவுள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது அமெரிக்காவின் மிகப்பெரிய ஆலை மட்டுமன்றி, உலகின் மிகப்பெரிய எஃகு ஆலைகளில் ஒன்றாகவும் திகழும்" எனக் குறிப்பிட்டார்.

2030-இல் உற்பத்தித் தொடக்கம்

முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், இந்த ஆலை ஆண்டுக்கு 10 மில்லியன் தொன் எஃகு உற்பத்தியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட உற்பத்தி பணிகள் 2030 ஆம் ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தாம் அறிமுகப்படுத்திய 50 சதவீத எஃகு இறக்குமதி வரி விதிப்பே இத்தகைய உள்நாட்டு முதலீடுகளுக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், "அமெரிக்க எஃகுத்துறை மீண்டும் உச்சத்தை நோக்கி நகர்கிறது. அதிக இறக்குமதி வரிகளைத் தவிர்க்கும் பொருட்டே அனைத்து நிறுவனங்களும் அமெரிக்காவிலேயே தங்கள் ஆலைகளை அமைத்து வருகின்றன" என்றார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் உள்நாட்டு உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கையைப் பாராட்டிய மெசாபி மெட்டாலிக்ஸ் தலைவர் Rewant Ruia, "அமெரிக்காவில் உற்பத்தி செய்வத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் மீட்டெடுத்ததற்காக அதிபர் ட்ரம்பிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறினார்.

முக்கியத்துவம் பெறும் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு

இந்த அறிவிப்பு குறித்து கருத்து வெளியிட்ட மெசாபி மெட்டாலிக்ஸ் முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) ஜோ புரோக்கிங் (Joe Broking), "இது அமெரிக்க எஃகு உற்பத்தித் துறைக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். நாட்டின் பாதுகாப்புத்துறை , வாகன உற்பத்தி, கப்பல் கட்டும் தொழில், வீட்டு உபயோகப் பொருட்கள், எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு  திட்டங்களுக்குத் தேவையான அத்தியாவசிய எஃகை இந்த ஆலை வழங்கும்" எனக் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியான பின்னணி

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் (Midterm Races) நெருங்கி வரும் சூழலில், முக்கிய போட்டி மாநிலமான அயோவாவில் மேற்கொள்ளப்படும் இந்த பிரம்மாண்ட தொழில் முதலீடு, குடியரசுக் கட்சிக்கு (Republicans) அரசியல் ரீதியாகவும் பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் குடியரசுக் கட்சியின் முக்கிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ்ஸார் குழுமத்தின் பின்னணி

இந்தியாவில் 1969 ஆம் ஆண்டு சஷி ருையா மற்றும் ரவி ருையா ஆகிய சகோதரர்களால் தொடங்கப்பட்ட எஸ்ஸார் குழுமம், எரிசக்தி, சுரங்கம், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள ஒரு முன்னணி கூட்டுப்பங்கு நிறுவனமாகும் (Conglomerate). இந்தியாவில் குஜராத்தின் ஹசிராவில் மிகப்பெரிய எஃகு ஆலையையும், வாடினாரில் சுத்திகரிப்பு நிலையத்தையும் கொண்டுள்ள இந்நிறுவனம், பிரித்தானியாவின் ஸ்டான்லோ சுத்திகரிப்பு நிலையத்தையும் (Stanlow Refinery) கையகப்படுத்தியுள்ளது. மேலும், சவூதி அரேபியாவிலும் குறைந்த கார்பன் எஃகு (Low-carbon Steel) ஆலையொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

இஸ்ரேல் செல்லும் விமானத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து நடவடிக்கை: இதுவரை வெளியான தகவல்கள்

...

arvoshan.com

தென்கொரியா சதித்திட்டம் தீட்டுகின்றது: கண்ணிவெடித் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்தார் கிம் யோ ஜொங்

...

arvoshan.com

பிரான்ஸில் பாடசாலை மாணவர்கள் வீதிப்போராட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது!

...

arvoshan.com

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அபுதாபி விஜயத்தை உறுதி செய்தது ஐக்கிய அரபு அமீரகம்

...

arvoshan.com

"அமெரிக்கா தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேற வேண்டும்!" - ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அதிரடி

...

arvoshan.com

ஸ்லோவாக்கிய பாடசாலையில் கத்திக்குத்து: ஆசிரியை பலி

...

arvoshan.com

ஈரான் போரில் மிக விரைவில் அமெரிக்கா வெற்றி பெறும்: ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி

...

arvoshan.com

செவ்டா எல்லைக் கூச்சல்: நெருக்கடிக்கு மத்தியில் ஸ்பானிய அரசப் பிரதிநிதி பதவி விலகல்!

...

arvoshan.com

தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

...

arvoshan.com

ட்ரம்ப் நிராகரிப்பால் மசகு எண்ணெய் விலை உயர்வு

...

arvoshan.com

தாய்லாந்தில் தொடர் கனமழை: பாங்காக் நகரில் வெள்ளப்பெருக்கு; பேரிடர் பகுதியாக அறிவிப்பு

...

arvoshan.com

தென்னாப்பிரிக்காவில் 10ஆவது பெண்ணின் சடலம் மீட்பு: தொடர் கொலைகளால் பரபரப்பு

...

arvoshan.com

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் விதித்த நிபந்தனைகளை நிராகரித்தார் டொனால்ட் ட்ரம்ப்

...

arvoshan.com

ரஷ்யாவில் தொடரும் கரடித் தாக்குதல்கள்: ஒரே மாதத்தில் 7 பேர் பலி!

...

arvoshan.com

கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம்: கட்டிடம் தரைமட்டம்; இருவர் காயம்

...