‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் தொடக்கி வைத்தார் தமிழக முதல்வர் விஜய்

arvloshan.com

தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அரசின் சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று மதுரையில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர், அங்கு புதிதாகப் பிறந்த 30 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை நேரடியாக அணிவித்து இத்திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் என். ஆனந்த் , அருண்ராஜ், நிர்மல் குமார், விசுவநாதன் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாகச் சென்னையிலிருந்து தனி வானூர்தி மூலம் மதுரை வந்தடைந்த முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை வழியாக இராசாசி அரசு மருத்துவமனைக்குச் சென்றடைந்தார்.

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர்களால் இன்று ஒரே நேரத்தில் தொடக்கி வைக்கப்பட்டது.

கடந்த ஜூன் 22-ஆம் திகதிக்குப் பிறகு பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் பயன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசு ஆண்டதோறும் 756 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

காந்தி அருங்காட்சியகம் திறப்பு:

இதனைத் தொடர்ந்து, 10 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைத்தார். அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த பின்னர், மாலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு மேற்கொள்ளும் முதல்வர், இரவு 6.00 மணியளவில் தனி வானூர்தி மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மதுரையில் முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட 'ரோடு ஷோ': கடுமையான வெயிலில் 10 பேர் மயக்கம்!

...

arvoshan.com

உத்தர பிரதேசத்தில் தொடர் மழை: 56 பேர் பலி, 1000 வீடுகள் சேதம்!

...

arvoshan.com

இந்தியாவில் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் வீழ்ந்த 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

...

arvoshan.com

சூரியசக்தித் துறையில் 16 பில்லியன் $ முதலீடு: இந்தியாவிற்கு அமெரிக்கா விதிக்கும் புதிய வரிச் சவால்!

...

arvoshan.com

‘விஜய்யை சாடிய ஸ்டாலின்’: முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தை சுயபரிசோதனை செய்ய கோரிக்கை!

...

arvoshan.com

ஜெம் வீரமணி வழக்கைப் பூசிமெழுகிய திமுக: மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாடல்!

...

arvoshan.com

ஜப்பானுக்குப் போட்டியாக இந்தியாவின் புதிய அதிவேக 'B35' புல்லட் ரயில்!

...

arvoshan.com

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தொழுப்பேட்டில் நாளை முதல்வர் விஜய் தீவிரப் பிரச்சாரம்!

...

arvoshan.com

நொய்டாவில் ஓடும் பேருந்தில் தீ விபத்து: பெண் உட்பட 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு

...

arvoshan.com

திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாட்களில் ரூ.29 கோடி உண்டியல் வருமானம்; 33 லட்சம் லட்டுகள் விற்பனை!

...

arvoshan.com

ரூ.10,000 சம்பளப் பிரச்சினை: சூரத்தில் ரூ.24 கோடி ஆடைகள் தீக்கிரை!

...

arvoshan.com

தமிழக மீனவர் படகுகள் அழிப்பு: மத்திய அரசுக்கு மீனவர் காங்கிரஸ் கண்டனம்!

...

arvoshan.com

சபரிமலையில் அரவணைத் தட்டுப்பாடு: கேரள அரசு - தேவஸ்தான வாரியம் இடையே மோதல்

...

arvoshan.com

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: மாணவர்களுடன் உணவருந்திய முதலமைச்சர் விஜய்!

...

arvoshan.com

“முதல்வர் விஜய்யின் ஆணவத்துக்கு பாடம் புகட்டும் வாய்ப்பே இடைத்தேர்தல்...” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

...