தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் கைது
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாகியிருந்த பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலேகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை - திநியாவல பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதி விகாரை ஒன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறித் தப்பிச் சென்றிருந்த நிலையிலேயே, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் மூலம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.