‘டோரதி’ திரைப்பட கதைத் திருட்டு: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது புகார்!

arvloshan.com

தான் இயக்கிய குறும் படத் திரைப்படத்தின் கதையைத் திருடி ‘டோரதி’ என்ற திரைப்படத்தை உருவாக்கியதாக, பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் குற்றவியல் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘மதுரை மைந்தன்’ என்ற பெயரில் அறியப்படும் குறும்பட இயக்குநர் முகமது செரிப் என்பவரே இப் புகாரை அளித்துள்ளார்.

அவர் சமர்ப்பித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கொரோனா (Covid-19) பெருந்தொற்று காலத்தில் திருநங்கைகளின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு 3 நிமிடங்கள் கொண்ட ‘டாட் நங்கை’ எனும் குறுந்திரைப்படத்தை நான் தயாரித்திருந்தேன். சமூக வலைத்தளங்களில் (Social Media) வெளியிடப்பட்ட இக் குறும்படம் பெருமளவிலான பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. தொடர்ச்சியாக, இக் கதைக் கருவை முழுநீளத் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்த வேளையில், சில காரணங்களால் அப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அண்மையில் திரைக்கு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படத்தைப் பார்த்த சிலர், அப் படத்தின் கதைக் கரு எனது குறும்படத்தை ஒத்திருப்பதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அத்திரைப்படத்தைப் பார்வையிட்டபோது, எனது முன் அனுமதியோ அல்லது முறையான உரிமங்களோ இன்றி எனது கதைக் கருவை முழுமையாகப் பயன்படுத்தி ‘டோரதி’ திரைப்படம் இயக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, இது குறித்து மேற்படி திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராகச் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இப் பிரச்சினை தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், "‘டோரதி’ திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் எனது குறும்படத்துடன் முற்றிலும் ஒத்துப்போகின்றன. மேலும், எனது குறும்படத்திலே நடித்த மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணே இத் திரைப்படத்திலும் நடிக்க வைக்கப்பட்டுள்ளார். எனது படைப்பிற்கான உரிய அங்கீகாரமும் நீதியும் எனக்குக் கிடைக்க வேண்டும். காவல்துறை தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில், நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டம் நடத்துவேன்" எனத் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘சிங்காரம்’ திரைப்படத்தில் உரிமைக்காகப் போராடும் யோகி பாபு: அக்டோபர் 30-ல் திரைக்கு வருகிறது!

...

arvoshan.com

'ஜெயிலர் 2' (Jailer 2) உருவான கதை: ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்கள்!

...

arvoshan.com

மீண்டும் களமிறங்கும் ‘சேனாதிபதி’: ‘இந்தியன் 3’ படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!

...

arvoshan.com

ஐமேக்ஸ் (IMAX) திரையரங்குகளில் வெளியாகிறது சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம்!

...

arvoshan.com

‘ஜெயிலர் 2’ சிறப்பு நிகழ்ச்சி அக். 9-ல் ஒளிபரப்பு: படக்குழு அறிவிப்பு

...

arvoshan.com

‘ட்ரோன்ஸ்’ ஃபேண்டஸி திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது!

...

arvoshan.com

15 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் கிடைத்த வெற்றி: ரசிகர்களுக்கு நடிகர் ரிஷிகாந்த் நெகிழ்ச்சி நன்றி

...

arvoshan.com

‘ஓம்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

...

arvoshan.com

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்திற்கு சூர்யா, கார்த்தி வாழ்த்து!

...

arvoshan.com

துருவ் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான 'சைமா' விருது!

...

arvoshan.com

‘பத்தா’ திரைப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சிப் பாராட்டு!

...

arvoshan.com

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’ எனும் பெயரில் திரைப்படமாகிறது!

...

arvoshan.com

கணினித் தொழில்நுட்பத்தில் 'யாழி': 'அன்னக்கிளியே' சுயாதீன பாடல் வெளியீடு!

...

arvoshan.com

மணிகண்டனின் 'மக்கள் காவலன்' டிசம்பர் 4இல் வெளியீடு!

...

arvoshan.com

மைசூரில் 'தர்மன்' படப்பிடிப்பு: ஆட்டோவில் வந்து ரசிகர்களை நெகிழ வைத்த ரஜினிகாந்த்!

...