டென்மார்க்கில் வேகமாக வளர்க்கப்படும் இறைச்சிக் கோழிகளுக்குத் தடை விதிக்கத் திட்டம்!

arvloshan.com

வேகமாக வளர்க்கப்படும் இறைச்சிக் கோழிகள் (Turbo Chickens) வளர்ப்பதற்குத் தேசிய அளவில் தடை விதிப்பதுடன், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இத்தடையை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க விரும்புவதாக டென்மார்க்கின் விலங்கு நலத்துறை அமைச்சர் கிறிஸ்டியன் ராப்ஜெர்க் மட்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், முதற்கட்டமாக டென்மார்க்கில் இத்தகைய கோழி இனங்களை வளர்ப்பதற்குத் தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

எனினும், இந்தத் தடையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் சட்ட ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய மட்டத்திலும் இத்தடையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

பொதுவாக இறைச்சிக்காக வளர்க்கப்படும் சில வணிகக் கோழி இனங்கள், பிறந்த ஐந்து வாரங்களிலேயே முழுமையான உடல் எடையை அடைகின்றன. ஆனால், இயற்கையான சூழலில் மேய்ச்சல் நிலங்களில் வளர அனுமதிக்கப்படும் கோழிகள் முழுமையான வளர்ச்சியை அடைவதற்கு சுமார் 12 வாரங்கள் தேவைப்படுகின்றன.

இதேவேளை, அண்டை நாடான நோர்வேயிலும் இத்தகைய கோழி இனங்களுக்குத் தற்போது முழுமையான தடை இல்லை. இருப்பினும், சில்லறை விற்பனை நிறுவனங்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் வேகமாக வளரும் கோழி இனங்களின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்துவதற்கு அந்நாடு உறுதியளித்துள்ளது.

கடந்த வாரம் டென்மார்க்கின் TV2 தொலைக்காட்சி, அந்நாட்டின் மிகப்பெரிய கோழி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றில் இரகசியக் கமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பியது.

அதில், கோழிகளுக்கு நாளொன்றுக்கு மூன்று மணிநேரம் மாத்திரமே இருள் சூழ்ந்த ஓய்வு நேரம் வழங்கப்படுவது தெரியவந்தது. ஆனால், அந்நாட்டின் விதிமுறைகளின்படி கோழிகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மணிநேர இருள் சூழ்ந்த நேரம் வழங்கப்பட வேண்டும்.

கோழிகளுக்கு இருள் சூழ்ந்த ஓய்வு நேரம் குறைக்கப்படுவதன் மூலம் அவை அதிகளவில் உணவு உட்கொண்டு, குறுகிய காலத்தில் அதிக உடல் எடையை அடைவதாகக் கூறப்படுகிறது. இதனால், அவற்றின் விலங்கு நலன் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் கிறிஸ்டியன் ராப்ஜெர்க் மட்சன், ஊடகங்களில் வெளியான காட்சிகள் தாம் எதிர்பார்க்கும் விலங்கு நலத் தரத்தைப் பிரதிபலிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், டென்மார்க்கில் மேற்கொள்ளப்படும் விலங்கு நல ஆய்வுகளில் மூன்றில் ஒரு பங்கு ஆய்வுகளின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது நாட்டில் விலங்கு நலன் தொடர்பில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுவதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

டென்மார்க்கின் மார்ச் மாத நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்ற விவாதங்களில் விலங்கு நலன் முக்கிய பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக, அதிகளவில் பன்றிகளை வளர்த்து பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்கும் டென்மார்க்கில், கால்நடைகளின் நலன் தொடர்பான விவகாரங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன.

இதேவேளை, 2025ஆம் ஆண்டு டென்மார்க் கால்நடை மற்றும் உணவு நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், மெதுவாக வளரக்கூடிய கோழி இனங்களைப் பயன்படுத்துவது சிறந்த விலங்கு நலனுடன் தொடர்புடையது எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் – புதிய குடிவரவு விதிகள் அறிவிப்பு!

...

arvoshan.com

நேபாளத்தில் தரையிறங்க முயன்றபோது இரண்டு ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

...

arvoshan.com

அமெரிக்கா – ஈரான் இடையே இராஜதந்திரப் பேச்சுவார்த்தை: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 7 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி

...

arvoshan.com

ஜெர்மனியில் தீவிரமடையும் ஜென்-ஸி போராட்டம்: பிராங்க்பர்ட்டில் கடைகள் சூறை; பொலிஸார் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

...

arvoshan.com

ஈரான் மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்த ட்ரம்ப்புக்கு நெதன்யாகு அழுத்தம் – டக்கர் கார்ல்சன் பரபரப்பு குற்றச்சாட்டு!

...

arvoshan.com

அமெரிக்காவில் குடியிருப்புப் பகுதியில் தனியார் விமானம் விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

...

arvoshan.com

வரலாறு காணாத கிரிப்டோ கொள்ளை: Binance தளத்திலிருந்து 360 கோடி டொலர் பணத்தை மீளப்பெற்ற பயனர்கள்!

...

arvoshan.com

அமெரிக்காவில் நடுவானில் மோதிய இரு ஹெலிகொப்டர்கள்; மூவர் உயிரிழப்பு

...

arvoshan.com

மூன்று மாத தொடர் விலை அதிகரிப்புக்குப் பின்னர் எரிபொருள் விலைகளைக் குறைத்தது ஐக்கிய அரபு இராச்சியம்!

...

arvoshan.com

ஹரி பொட்டர் வேடமணிந்து மன்னராட்சியை விமர்சித்த தாய்லாந்து வழக்கறிஞருக்கு 34 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை!

...

arvoshan.com

அமெரிக்காவை அதிகம் சார்ந்திருப்பதை உணர்ந்துள்ளோம் – கனேடிய பிரதமர் மார்க் கார்னி

...

arvoshan.com

ஈரான் போர் பதற்றம் – ஆறு மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்ட மசகு எண்ணெய் விலை!

...

arvoshan.com

7 இலட்சம் அமெரிக்க டொலர் காப்புறுதிக் கோரிக்கை நிராகரிப்பு – பீப்பிள்ஸ் லீசிங்கின் மேன்முறையீட்டை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

...

arvoshan.com

இத்தாலியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், தொழிலாளர்கள் போராட்டம்!

...

arvoshan.com

பாகிஸ்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் இமான் மசாரி உள்ளிட்ட இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

...