ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்: டெல்லி, மும்பையில் 500 பேர் கைது

arvloshan.com

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, தலைநகர் புதுடெல்லி மற்றும் மும்பையில் வெள்ளிக்கிழமை (அக். 02) நடைபெற்ற பிரமாண்ட போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சிறப்பு தீவிர மறுஆய்வு உள்ளிட்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பல்வேறு முக்கிய முடிவுகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகவும், ஏனைய இரு தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளும் தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகலை வலியுறுத்தி இணைந்து களமிறங்கியுள்ளன.

டெல்லியில் முற்றுகை மற்றும் கைது நடவடிக்கை

டெல்லி ஜந்தர் மந்தரில் பேரணி மற்றும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றியுள்ள டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டதுடன், அப்பகுதியில் இணைய சேவைகளும் (Internet Services) இடைநிறுத்தப்பட்டன. மேலும், போராட்டத்திற்கு டெல்லி காவல் துறை தடை உத்தரவும் பிறப்பித்திருந்தது.

இருப்பினும், தடையை மீறி ஜந்தர் மந்தர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான சவுரப் பரத்வாஜ், சஞ்சீவ் ஜா, டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஆதிஷி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் அடங்குவர்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த சிபிஎம் (CPI-M) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, "மாணவர்களும் இளைஞர்களும் ஜனநாயகப் பாதையிலேயே போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஞானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்படும் வரை இந்த மக்கள் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.

மும்பையிலும் பதற்றம்

இதேவேளை, மும்பை சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார். மகாராஷ்டிர காவல் துறை இதற்கு அனுமதி மறுத்திருந்த போதிலும், தடையை மீறி சிவாஜி பூங்கா பகுதியில் பெருமளவில் திரண்ட இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தலைநகர் டெல்லி மற்றும் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடிப் போராட்டங்களால் இரு நகரங்களிலும் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

முதல்வர் விஜய்க்கு சால்வை: கொச்சைப்படுத்த வேண்டாம் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

...

arvoshan.com

ஹார்முஸ் நீரிணையில் பெரும் விபத்து: கடல் வெடிமருந்தில் மோதி கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற மாபெரும் கப்பல் தீப்பற்றி எரிந்தது

...

arvoshan.com

உச்ச நீதிமன்றத்தை நோக்கி இண்டியா கூட்டணி பேரணி: ராகுல், நேஹா உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

...

arvoshan.com

“இந்தியாவின் முதலாளி அம்பானியா?”: எலான் மஸ்க் கேள்வி

...

arvoshan.com

தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக அபார வெற்றி!

...

arvoshan.com

"இந்தியாவிற்கு வருக எலோன், மற்றவரை சந்திக்கும் வரை காத்திருங்கள்": ராகுல் காந்தி கருத்து!

...

arvoshan.com

இந்தியத் திரைத்துறையின் சிரேஷ்ட நடிகரான நானா படேக்கர் மாரடைப்பால் காலமானார்

...

arvoshan.com

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு வீழ்ச்சி; 9இல் வாக்கு எண்ணிக்கை!

...

arvoshan.com

2023க்குப் பின்னரான அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய பிரகாஷ் ராஜ் கோரிக்கை

...

arvoshan.com

இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக புதிய பயங்கரவாத அலை: இஸ்ரேலிய தூதர் எச்சரிக்கை!

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் கேரளப் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!

...

arvoshan.com

இந்தியாவின் அணுஆயுத இருப்பு 190 ஆக அதிகரிப்பு: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

...

arvoshan.com

சாலை வசதியில்லை: கர்ப்பிணியை 8 கி.மீ. தூளியில் சுமந்து சென்ற உறவினர்கள்!

...

arvoshan.com

தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?: மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் விஜய் கடும் கண்டனம்

...

arvoshan.com

செனாப் பாலத்தில் 100 கி.மீ வேகத்தில் இயக்கி வந்தே பாரத் ரயில் சாதனை!

...