செனாப் பாலத்தில் 100 கி.மீ வேகத்தில் இயக்கி வந்தே பாரத் ரயில் சாதனை!

arvloshan.com

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலமான செனாப் பாலத்தின் மீது, 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயிலை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி வடக்கு ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் செனாப் ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ரயில் பாலம், கடுமையான நிலநடுக்கம் மற்றும் பலத்த புயல் காற்றையும் தாங்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா ரயில் நிலையத்திலிருந்து ஸ்ரீநகர் வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு முறைப்படி தொடங்கி வைத்திருந்தார்.

வேகச் சோதனை வெற்றி

இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு சிறப்பு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து வடக்கு கோட்ட ரயில்வேயின் மூத்த வணிக மேலாளர்  உச்சிகத் சிங்கால் தெரிவிக்கையில்:

"வடக்கு ரயில்வேயின் ஜம்மு கோட்டத்திற்கு உட்பட்ட 'ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா – பனிஹால்' ரயில் பிரிவில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

இச்சோதனையின் போது, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உலகின் மிக உயரமான செனாப் பாலத்தையும், இந்தியாவின் முதல் கேபிள் மூலம் தாங்கப்படும் ரயில்வே பாலமான 'அஞ்சி பாலத்தையும்' (Anji Khad Bridge) மணிக்கு 100 கி.மீ வேகத்தில் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது" எனக் குறிப்பிட்டார்.

இந்த அதிவேக சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளதைத் தொடர்ந்து, கத்ரா மற்றும் பனிஹால் இடையிலான ரயில் பயண நேரம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

முதல்வர் விஜய்க்கு சால்வை: கொச்சைப்படுத்த வேண்டாம் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

...

arvoshan.com

ஹார்முஸ் நீரிணையில் பெரும் விபத்து: கடல் வெடிமருந்தில் மோதி கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற மாபெரும் கப்பல் தீப்பற்றி எரிந்தது

...

arvoshan.com

உச்ச நீதிமன்றத்தை நோக்கி இண்டியா கூட்டணி பேரணி: ராகுல், நேஹா உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

...

arvoshan.com

“இந்தியாவின் முதலாளி அம்பானியா?”: எலான் மஸ்க் கேள்வி

...

arvoshan.com

தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக அபார வெற்றி!

...

arvoshan.com

"இந்தியாவிற்கு வருக எலோன், மற்றவரை சந்திக்கும் வரை காத்திருங்கள்": ராகுல் காந்தி கருத்து!

...

arvoshan.com

இந்தியத் திரைத்துறையின் சிரேஷ்ட நடிகரான நானா படேக்கர் மாரடைப்பால் காலமானார்

...

arvoshan.com

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு வீழ்ச்சி; 9இல் வாக்கு எண்ணிக்கை!

...

arvoshan.com

2023க்குப் பின்னரான அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய பிரகாஷ் ராஜ் கோரிக்கை

...

arvoshan.com

இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக புதிய பயங்கரவாத அலை: இஸ்ரேலிய தூதர் எச்சரிக்கை!

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் கேரளப் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!

...

arvoshan.com

இந்தியாவின் அணுஆயுத இருப்பு 190 ஆக அதிகரிப்பு: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

...

arvoshan.com

சாலை வசதியில்லை: கர்ப்பிணியை 8 கி.மீ. தூளியில் சுமந்து சென்ற உறவினர்கள்!

...

arvoshan.com

தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?: மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் விஜய் கடும் கண்டனம்

...

arvoshan.com

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்: டெல்லி, மும்பையில் 500 பேர் கைது

...